பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. முந்தியும் முதல் நடு இறுதியுமானாய்

முந்திய முதல் நடு

இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர்,

யாவர்மற்(று) அறிவார்? பங்தணை விரலியும்

நீயும் கின் அடியார் பழங்குடில் தொறும் எழுங் தருளிய பரனே! செந் தழல் புரை திரு

மேனியும் காட்டித் திருப்பெருங் துறையுறை

கோயிலும் காட்டி அந்தணன் ஆவதும்

காட்டிவங்(து) ஆண்டாய்! ஆரமு தே!பள்ளி

எழுந்தரு ளாயே! சிவானந்தானுபவம் விழைந்து, அதனைப் பெற்றுத் துய்க்க நினைத்த மாணிக்கவாசகப் பெருமான் முந்தி யும் முதல் நடு இறுதியும் ஆனாய்’ என்று தொடங்கும் இத்திருப்பாட்டில் தனக்கென ஒர் ஊரில்லாதவனும் பேர் இல்லாதவனுமான சிவபெருமான் ஒர் உருக்கொண்டு வந்தருளும் சிறப்பினைக் கூறத் தொடங்கி ஆரமுதே’ என விளித்தார். ஈண்டு ஆரமுதும்’ என்ற சொல் பெறுதற்கரிய முத்தி இன்பத்தினை உணர்த்தி நிற்கும்.