பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் I45,

கொழுங்தையு முடனே கொண்டு இங்கு எழுந்தருளத் தகும் எம் பெருமானே

- திருக்கழுமல மும்மணிக்கோவை: 4

என்று சிவனும் உமையும் தம் உள்ளத்தே எழுந்தருள வேண்டுமென்று விழைந்தது புலப்படுகின்றது.

செந் தழல் புரை திருமேனியுங்காட்டி என்பது முதல் நிலை . சிவந்த நெருப்பை யொத்த நிறம் வாய்ந்த வடிவத்தைக் காட்டியருளி என்பது இத்தொடரின் பொருள். சிவன் செந்திறத்தினன். தீப்போலும் அவன் மேனியைக் காட்டி நிற்கிறான்.

இரண்டாவது, திருப்பெருந்துறையுறை கோயிலுங் காட்டி’ என்பது, திருப்பெருந்துறையில் கோயில் கொண்டு விளங்குதலைக் காட்டியும் என்று பொருள் படும் .

மூன்றாவது, அந்தணன் ஆவதும் காட்டி’ என்ப தாகும். வேதியனாகிய உருக்கொண்ட நிலை காட்டி என்பதனுள் மாணிக்கவாசகர் வாழ்க்கைக் குறிப்பொன்று ஒளிந்து நிற்கின்றது. குருந்த மரத்தினடியில் இறைவன் வேதியனாக வேடந்தாங்கி வந்து மாணிக்கவாசகருக்கு உபதேசம் செய்ததைக் குறிக்கும். அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய் நிற்கும் பரம்பொருள், ஒர் உருவந் தாங்கி வெளிப்பட்ட நிலையினை இது குறித்தவாறு, அவ்வாறு வேதியனாக உருக்கொண்டு வந்து, குருந்த மரத்தடியின்கீழ் அமர்ந்து தமக்கு உபதேசித்த செயல் தம்மை அடிமை கொள்ள-ஆட்கொள்ள வந்த செயலே ஆகுமென்பார் அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய்” என்றார்.

இவ்வாறு உயிர்களுக்கெல்லாம் உரிய காலத்தில் அருள் செய்வதனையே கடமையாகக் கொண்டிருக்கும்