பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. புவனியிற் போய்ப் பிறவாமை

புவனியிற் போய்ப்பிற

வாமையில் நாள் நாம் போக்குகின் றோம் அவ

மே, இந்தப் பூமி சிவன் உய்யக் கொள்கின்ற

வாறென்று நோக்கித் திருப்பெருங் துறையுறை

வாய்! திரு மாலாம் அவன்விருப் பெய்தவும்,

மலரவன் ஆசைப் படவும், கின் அலர்ந்தமெய்க்

கருணையும் நீயும் அவனியிற் புகுந்தெமை

ஆட்கொள்ள வல்லாய்! ஆரமு தே!பள்ளி

எழுந்தரு ளாயே! மேலைத் திருப்பாட்டில் இவ்வுலகில் வாழும் உயிர் களைச் சிவானந்தக் கடலில் திளைக்கச் செய்து பேரின்ப வெள்ளத்தில் ஆழ்த்தி, அப்பெருமான் உயிர்க்குயிராய் நின்ற நிலையினை உணர்த்திய மாணிக்கவாசகப் பெருமான் புவனியிற் போய்ப் பிறவாமை’ என்று தொடங்கும் திருப்பள்ளியெழுச்சியின் இறுதிப் பாடலில், இவ்வுலகின்கண் திருமால், பிரமன் ஆசைப்படும்படி எம்மை அடிமை கொள்ளவேண்டும் என்று விரும்பி