பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. மாலறியா நான்முகனும் காணா மலை

மாலறியா நான்முகனும்

காணா மலையினைநாம் போலறிவோம் என்றுள்ள

பொக்கங்க ளே பேசும் பாலுாறு தேன்வாய்ப்

படிற் கடைதிறவாய்! ஞாலமே விண்ணே

பிறவே அறிவரியான் கோலமும் நம்மை ஆட்

கொண்டருளிக் கோதாட்டுஞ்

சீலமும் பாடிச்

சிவனே! சிவனே! என்(று) ஒலம் இடினும் l

உணராய் உணராய்காண்! ஏலக் குழலி

பரிசேலோர் எம்பாவாய்!

ஒண்நித்தில நகையாய்’ என்னும் சென்ற பாட்டில் வீழ்நாள் படாது வாழ்நாள் முழுதும் சிவனை முழுதும் மறவாத சிந்தையராய் வாழ்ந்து அவனருளாலே அவன் தாள் வணங்கி அவனைக் கண்ணினிக்கக் கண்டு, வாயூறப் பாடி, மெய்யூற நெகிழ்ந்து நிற்கவேண்டும் என்று அறிவுறுத்திய மணிவாசக அடிகளார், இப்பாடலில் திருமாலாலும் நான்முகனாலும் காண முடியாத அவ் அண்ணாமலையான் அன்பால் நினைந்து எளிமையில் இணைந்து நெஞ்சு நெக்குருகி நிற்பவர்க்குத் தானே வந்து தலையளி செய்து ஆட்கொண்டருளுவான் என்று சாற்று. கின்றார்.