பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 திருவெம்பாவை விளக்கம்

ஆதொரு தெய்வமாக மாதொரு பாகனார்தாம் வருவார்’ என்பது சைவப் பெருமக்களது நம்பிக்கை அல்லவா? * பாதாளம் ஏழினும் கீழ், சொற்கழிவு பாத மலர் போதார் புனை முடியும் எல்லாப் பொருள் முடிவே” என்று குறிப்பிட்டதுடன் அமையாமல் பேதை யொருபால் திருமேனி ஒன்றல்லன்’ எனும் உண்மை யினையும் உரைத்து நிற்கின்றார். ஈண்டுப் பேதை என்பது பெண்ணின் நல்லாளாய் விளங்கும் பெருமாட்டி யைக் குறிக்கும். இல்லதென் இல்லவள் மாண்பானால், உள்ளதென் இல்லவள் மாணாக் கடை’’ என்பதன்றோ வள்ளுவம். எல்லாப் பேறுகளும் உலகில் ஒருவனுக்குக் கிட்டியும் நல்ல மனைவி வாய்க்கவில்லையென்றால் பயனொன்றுமில்லை; எப்பேறும் வாய்க்காத நிலையிலும் ஒருவனுக்கு நல்ல மனைவி வாய்த்துவிட்டால் அவன் வாழ்க்கை பேறு பெற்ற வாழ்க்கை என்றே கூறவேண்டும். ஐயன் தந்த இரு நர்ழி நெல் கொண்டு அகிலத்திற்கே

படிய ளந்த பரமேட்டி, அகிலாண்டகோடி உயிர்களை வளர்க்கும் அபிராமி அன்னை ஆவள் அன்றோ ! எனவே உமையம்மை இறைவனின் ஒரு பாதியினை-வாம

பாகத்தினை-இடப்பாகத்தினைக் கொண்டாள் என்பது

வரலாறு .

உமையலாது உருவம் இல்லை’ என்றும், அரிதரு கண்ணியாளை ஒரு LJ ГГ ФЕД Г) ПГ Ф5 அருள்காரணத்தில் வருவார்’ என்றும் திருநாவுக்கரசர் பெருமான்

கிளத்துவது காண்க. ஒரு நாமம் ஒர் உருவம் அற்றவனாக இறைவன் விளங்கினாலும், நினைவார் உள்ளத்துள்ளே எழுந்தருளுவதற்கு ஒரு வடிவம் வேண்டும் அன்றோ! அவ் வடிவமே பேதையினை யொருபாற்கொண்ட திருமேனி

யாகும்.

ஒண்சுடரை, முத்தியும் ஞானமும் வானவர் அறியா முறைமுறை பலபல நெறிகளும் காட்டிக் கற்பனை