பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 திருவெம்பாவை விளக்கம்

பைம்பூண் கலனாடக் கோதை குழ லாட வண்டின் குழா மாட’’ என்று தொடங்கினார்.

குழை என்பது மகளிருடைய காதணியாகும். பழங் காலத்தில் அஃது ஒலையான் இயன்றதாயிருந்தது. பின்னர்ப் பொன்னால் இயன்றதாயிற்று. குழை’ என்ற சொல் இளந்தளிரை உணர்த்தி நிற்கும். இளந்தளி ரன்னவோர் அணிகலனைப் பெண்டிர் தம் செவிகளில் அந் நாளில் அணிந்திருந்தனர். சங்க இலக்கியத்திலேயே * குழை கூறப்பட்டுள்ளது. குழையாட’ என்றதனால் செவியும் செவியினையுடைய தலையும் அதனைத் தாங்கி ஏந்தி நின்ற கழுத்தும் அசைந்தன எனப் பெறப்பட்டது. பசிய பொன்னாலாகிய அணிகலன்கள் : பைம்பூண்’ எனப் பட்டன. நீராடுகின்ற காலையிலும் அவர்கள் அணிகலன் களை அணிந்திருந்தனர் என்பது அவர்களின் செல்வச் செழிப்பைக் குறித்தவாறாம். தலை அசைந்ததாலும் உடன் குழலும் அசைந்தது. கூந்தல் அசைந்த அளவில் அக்கூந்தலில் சூடப்பெற்றிருந்த மலர்களில் அமைந்திருந்த தேனை உண்டு உறங்கிக் கிடந்த வண்டின் கூட்டங்களும்

அசைந்தனவாயிற்று. எனவே வண்டின் குழாமாட’ என்றார். இவ்வாறு நான்கு முறை ஆட’ என்ற வினை யெச்சம் ஆடி, பாடி என்ற வினையெச்சங்களைத்

தொடர்ந்து ஆடுக’ எனும் வியங்கோள் வினையிறாக முடிந்திருப்பது ஒர் உயரிய உண்மையை உணர்த்தும் என்பர் சைவ சித்தாந்திகள். இங்ஙனம் உரைத்தது இறையருள் நிலையை அடைதற்குப் படிமுறையைக் கற்பிப்பது போலும் என்றும், ஞானம் வீடு பெறுதற்குச் சாதனம் என்று அருள் நூல்கள் குறிப்பிடும் என்றும், அது கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடுதல் என நான்கு கூறுபாடுகளையுடையது என்றும் குறிப்பிட்டு, அதற்கு எடுத்துக்காட்டாக,

கேட்டலுடன் சிந்தித்தல் கிட்டை கிளத்தலென ஈரிரண்டாம் கிளக்கின் ஞானம் - சுபக்கம்:276.