பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 திருவெம்பாவை விளக்கம்

இன்பம் ஒப்பற்ற இன்பமாம் பரமன் அளிக்கும் பேரின் பத்தைச் சுட்டியதாகும்.

எங்கும் கிடைக்காத பேரின்பம் நமக்குக் கிடைக்க வேண்டுமென்றால் முதலில் நம் மனமாசுகள் நீங்குதல் வேண்டும். மனமாசுகள் நீங்கிய உள்ளத்தைத் தான் இறைவன் குடிகொண்டு எழுந்தருளும் கோயிலாகக் கொள்வான். இறைவன் நம்மீது கொண்ட கருணை யினால்தான் இவ்வாறு எழுந்தருளுகின்றான் என்பதனை மாணிக்கவாசகரே,

பத்தர் சூழ்ப் பராபரன் பாரில் வந்து பார்ப்பான் எனச் சித்தர் சூழச் சிவபிரான் மூதூர் நடஞ்செய்வான்

தில்லை எத்தனாகி வந்து இல் புகுந்து எமை ஆளுங் கொண்டு

எம்பணி கொள்வான் வைத்த மாமலர்ச் சேவடிக்கண் கம்சென்னி மன்னி

மலருமே (சென்னிப்பத்து: 4)

என்பதனால் விளங்கும். கும்பிடுவான் யாரென்று தேடுகின்றான் கோவிந்தன்’ என்பது திவ்வியப் பிரபந்தத தொடர்.

எவ்வளவுதான் முயன்றாலும் எளிதில் அவன் திருவருளைப் பெற்று உய்யுமாறில்லை. அவனருளைப் பெறுவதற்கும் அவனருள் வேண்டும். அவன் அடியினைப் பரவுவதற்கும் அவனருள் வேண்டும். இதனையே அவனரு ளாலே அவன்தாள் வணங்கி’ என்பர் மணிவாசகர் சிவபுராணத்தில். நம் மனத்தே அவன்தன் ஒப்பற்ற திருவடிகளைப் பொருந்தச் செய்தல் என்பது அருமை யுடைய செயலாதலின், அதனை வெற்றிகரமாகச் செய்து முடித்த சிவனைச் சேவகன்” என்றார். சேவகன்” என்ற சொல் சிறந்த வீரன் என்னும் பொருளைத் தருவதாகும்