பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 திருவெம்பாவை விளக்கம்

கன்னியர்கள் இவ்வாறு சிவன் கழல் போற்றி தெள்ளிய நீரில் நீராடி மகிழ்ந்தனர். -

செங்க ணவன்பால்

திசைமுகன்பால் தேவர்கள்பால் எங்கும் இலாததோர்

இன்பம்கம் பாலதாக் கொங்குண் கருங்குழலி

நந்தம்மைக் கோதாட்டி இங்குகம் இல்லங்கள்

தோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதங்

தந்தருளுஞ் சேவகனை அங்கண் அரசை

அடியோங்கட் காரமுதை நங்கள் பெருமானைப்

பாடி கலந்திகழப் பங்கயப் பூம்புனல்பாய்ந்(து)

ஆடேலோர் எம்பாவாய்!