பக்கம்:திருவெம்பாவை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. ஏதேனும் ஆகாள்

உலகத்தில் மூன்று சோதிகள் ஒளி விடுகின்றன. சூரியன் சந்திரன், அக்கினி என்ற மூன்றையும் முப்பெரும் சுடர் என்று சொல்வார்கள். அக்கினி நெருப்பாகவும், விளக் காகவும் விளங்குகிறது. சிறிய விளக்கு ஓரிடத்தில் மாத்திரம் வெளிச்சத்தைக் கொடுக்கும். பெரிய விளக்கால்ை அகல மான் இடத்தில் வெளிச்சத்தைப் பரப்பும் இறைவன் சோதி வடிவமாக இருக்கிருன். அதுவும் பெருஞ்சோதியாக இருக் கிருன் அவ்வளவு பெருஞ்சேர்தியாக விளங்குபவன் எங்கும் தெரியவேணடும் அல்லவா? ஆளுல் அப்படித் தெரிவதி லே. அவன் அரும் பெருஞ் சோதியாக இருக்கிருன். ஞானிகள் உள்ளத்தடத்தில் மட்டும் வைத்துப் பார்ப்பவளுக, மற்றவர் களுக்கு அருமையான சோதியாக இருக்கிருன். .

தம் வீட்டில் நாம் ஏற்றும் விளக்கிற்கு ஆதியும் உண்டு; அந்தமும் உண்டு. சூரிய சந்திர அக்கினிகளுக்கும் சர்வப் பிரளய காலத்தில் அந்த இரண்டும் உண்டு. ஆளுல் இறைவனே ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் சோதியாக இருக்கிருன். அவனைப் பாடிப் பாவை நோன்பு நோற்பதற்குப் பெண்கள் பலர் கூடி ஒவ்வொரு வீட்டிலும் சென்று உறங்குபவர்களை எழுப்புவார்கள். அப்படி ஒரு கூட்டம் புறப்படும்போது யார் யார் வரவில்லை என்று கவனிப்பார்கள், ஒரு பெண் வரவில்லை என்பதைத் தெரிந்து அவள் ஏன் வரவில்லை என்ற கேள்வி பிறக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/10&oldid=579203" இலிருந்து மீள்விக்கப்பட்டது