பக்கம்:திருவெம்பாவை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனே? 17

"ஈசனிடத்தில் பக்தி உடையவர்களே, அவனுக்கு நீங்கள் பழைய அடியார்கள். ஆகையால் அந்த அன்பினுடைய பாங்கை எல்லாம் நீங்கள் உடையவர்களாக இருக்கிறீர்கள். என்னைப் போன்றவர்களோ புதிய அடியார் கள். நாங்கள் தவறு செய்வோம். எங்களுடைய புன்மையை நீங்களே நீக்கி ஆட்கொள்ள வேண்டும். அப்படிச் செய்வது பொல்லாதது ஆகுமா?’ என்று கேட்கிருள்.

பத்துஉடையீர், ஈசன் பமஅடியிர், பாங்குஉடையீர், புத்துஅடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டால்

பொல்லாதோ?

(பத்து - பக்தி. பழ அடியீர் - பழைய அடியார்களே. 'ஐயா பழவடியோம்' என்று வேறிடத்திலும் வருகிறது. பாங்கு என்பது பக்குவம், !

அவ்வாறு அந்தப் பெண் சொன்னதைக் கேட்டவுடன் எழுப்ப வந்த தலைவி சொல்கிருள். "உன்னுடைய அன்பு எங்களுக்குத் தெரியாதா? அது எத்தகையது! நாங்கள் எல்லோரும் அதனை அறியமாட்டோமா? என்கிருள்.

எத்தோகின் அன்புடைமை? எல்லோம் அறியோமோ?

இதைக் கேட்டுப் படுத்துக் கிடக்கிறவள் சொல்கிருள். "உண்மையாகச் சித்தம் அழகுடையவர்கள் நம் சிவ பெருமானைப் பாடமாட்டார்களா?' என்கிருள். எற்ருே எனபது எத்தோ எனத் திரிந்து நின்றது.

சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனே?

சித்தம் அழகியார் என்பது இறைவனுடைய திருவருளைச் சிந்தித்துப் பக்தி செய்பவர் என்னும் பொருளை உடையது. யாரையும் குறிக்காமல் சித்தம் அழகியார் டாடாரோ" என்றமையில்ை, 'இவள் நம்மைத்தான் சொல்கிருள். இறைவனைப் பாடாமல் இவ்வளவு நேரம் என்னைப் பற்றிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/18&oldid=579211" இலிருந்து மீள்விக்கப்பட்டது