பக்கம்:திருவெம்பாவை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இன்னும் துயிலுதியோ?

பாவை நோன்பு நாற்பதற்கு முதல் நாள் கன்னிப் பெண்கள் எல்லோரும் கூடிப் பேசிக்கொள்கிருர்கள். நாளே விடியற்காலை எல்லோரும் எழுந்து நீராடச் செல்ல வேண்டுமே. யாவரும் எழுந்து வருவார்களா?’ என்று ஒருத்தி கேட்கிருள். அதற்கு வேருெருத்தி, "என்ன அப்படிச் சொல்கிருய்? நானே எல்லோருக்கும் முன்னே எழுந்து வந்து உங்களை எழுப்புகிறேன், பாருங்கன்” என்கிருள். ஆனல் அவள் இன்று படுத்திருக்கிருள். அதைக் கண்டு வந்தவர் களின் தலைவி சொல்கிருள். மான் போன்ற @LನಕTರ್ಡಿಕತ್ಥ, நீ குதித்து எழுந்தால் மான் துள்ளிக் குதிப்பது போல இருக்குமே. நேற்று நீ என்ன சொன்ன ப்? நினைவு இருக் கிறதா? உங்களை நானே வந்து எழுப்புகிறேன் என்ருயே. இன்னும் என்னென்னவோ சொன்னுயே. அவைகள் எல்லாம் இப்போது எங்கே போயின? அவை போன திசை இன்னது என்று சொல்வாயா?”

மானே, நீ கென்னலே, நாளைவந்து உங்களே நானே எழுப்புவன் என்றலும் நாளுமே போன திசைபகராய்.

எங்களுக்கு எல்லாம் விடிந்துவிட்டது. இன்னும் உனக்கு

மாத்திரம் விடியவில்லையோ?” என்று கேட்கிருள். இன்னம் புலர்ந்தின்ருே: -

நாங்கள் எல்லாம் சிவபெருமானுடைய திருவடியைப் பாடி

வந்திருக்கிருேம். அவன் எத்தகையவன்? விண்ணுலகத்தில்

உள்ளவர்களும், பூ உலகத்தில் உள்ளவர்களும், ஏனைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/31&oldid=579224" இலிருந்து மீள்விக்கப்பட்டது