பக்கம்:திருவெம்பாவை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. உன் அடியார் எம் கணவர் ஆவார்

பெண்கள் இப்போது எல்லோரும் கூடிக்கொண்டார்கள். இறைவனைத் துதிக்கத் தொடங்குகிருர்கள். அவன் எல்லாப் பொருளுக்கும் மூலமான ஆதிமூலப் பழம்பொருள். ஆகவே,

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே!

என்கிருர்கள். மேலும் மாறிமாறிப் புதிய புதிய பொருள்கள் வருகின்றன. புதிய புதிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அவற்றுக்குப் பின்பும் புதுமை உடையவனுக இறைவன் இருக்கிருன். இதனை,

பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும்அப் பெற்றியனே!

என்று சொல்கிரு.ர்கள். இத்தகைய சிறந்த பெருமானைத்

தம்முடைய தலைவகைப் பெற்ற சிறப்பு உடைய அடியார்கள் அவர்கள். ஆதலால்,

உன்னைப் பிராளுகப் பெற்றஉன் சீரடியோம்

என்று அதனைக் கூறிக் கொள்கிருர்கள். மனிதர்களுக்கு அடியார்களாக இருப்பதைவிட இறைவனுக்கு அடியார் களாக இருப்பதன் காரணத்தால் சீரடியோம்' என்று சொல்லிக் கொள்கிரு.ர்கள்.

தொண்டர்கள் கூட்டத்தோடு சேர்ந்து பணி செய்தால் அந்தப் பணிக்கு இடையூறு இல்லாமல் இருக்கும். தனியாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/45&oldid=579238" இலிருந்து மீள்விக்கப்பட்டது