பக்கம்:திருவெம்பாவை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

() திருவெம்பாவை

5

பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்

என்ருர். பாதத்தைச் சொன்னவுடன் முடியைப் பற்றி நினைக்கிருர், எந்தப் பொருள் முடிந்தாலும் அவற்றுக்கும் அப்பால் இருக்கிறவன் ஆண்டவன் எல்லாப் பொருளுக்கும் முடிவு உண்டு. முடிவாக உள்ள பொருளுக்கும் முடிவாக அவனே இருக்கிருன், அவன்தான் முடிவான முடிவு. அவன் திருமுடியில் மலர் இருக்கிறது. இங்கே அடியார்கள் அவனுக்கு அலங்காரமாக இட்ட மலர்களே அவன் தன்னுடைய விசுவரூபத்திலும் ஏற்றுக் கொண்டிருக்கிருன். அடியார்களுடைய அன்பை நிளேந்து அவ்வாறு செய்கின்ற பெரும் கருணையாளன் அவன்.

போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே.

முதலில் பாதமலர் சொற்கழிவு என்றும், இங்கே பொருளின் முடிவு என்றும் சொல்லையும், பொருளேபும் குறித்தார்.

ஆண்டவனுக்கு எத்தனையோ வடிவங்கள். தனக்கென்று ஒருருவம் இல்லாவிட்டாலும் அடியார்களுக்குத் திரு வருள செய்யும் பொருட்டுப் பலவகையான திருமேனிகளை எடுத்துக் கொள்கிருன். அருவாக இருக்கிற அவன் முதலில் உருவாக வரும்போது அர்த்தநாரீசுவரனுக வருகிருன்.

நீல மேனி வாலிழை பாகத்து ஒருவன் இருதாள் கிழற்கீழ் மூவகை உலகும் முகிழ்த்தன; முறையே

என்று ஐங்குறுநூறு சொல்கிறது. அப்படி அர்த்தநாரீசு வரராக இருக்கும் திருமேனி ஒன்றுமாத்திரம் அவனுக்குச் சொத்தமானது அல்ல. இன்னும் பலப்பல் திருவுருவங்களை ஏற்று அருளுவான். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/51&oldid=579244" இலிருந்து மீள்விக்கப்பட்டது