பக்கம்:திருவெம்பாவை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$2 திருவெம்பாவை

ஆண்டவனப்பற்றி நாம் புகழப் புகுந்தால் எவ்வாறு புகழ்வது? உலகத்திலுள்ள மக்களுக்கு ஊர் என்றும் பேர் என்றும் உற்ருர் என்றும் அயலார் என்றும் வேறுபாடு உண்டு. ஆனல் ஆண்டவனுக்கோ அது இல்லை. எல்லாம் அவன் ஊர்? ஆதலால் எந்த ஊரை அவன் ஊர் என்று சொல்வது?

ஏதவன் ஊர்?

அவனுக்குச் சத நாம அருச்சனை இருக்கிறது. சகஸ்ர நாம அருச்சனை என்றும் சொல்கிரு.ர்கள். ஒவ்வொரு தலத் திற்கும் வெவ்வேறு சகஸ்ர நாமங்கள் இருக்கின்றன. அவற்றுக்குள்ளும் அவனுடைய திருநாமங்கள் அடங்குவது இல்லை. அவனுக்கு என்று தனிப் பேர் இருந்தால் இன்னது என்று சுட்டிச் சொல்ல முடியும். அவனுக்கோ பேர் இல்லே .

ஏதவன் பேர்?

உலகத்திலுள்ள மக்கள் எல்லோரும் அவனுக்குச் சொந்தமானவர்கள். அயலார் என்று சொல்வதற்கு யாரும் இல்லை. அவனுடைய திருவருள் ஆட்சியில் அடங்காத பிராணிகளே கிடையா. ஆகவே அவனுக்கு உற்ருர் இவர், அயலார் இவர் என்று எப்படிச் சொல்ல முடியும்?

ஆர் உற்ருர், ஆர் அயலார்?

'இவ்வாறு எந்த வகையிலும் எல்லே கட்ட முடியாத அந்தப் பெருமான நம்முடைய சிற்றறிவும், சிறிய ஆற்றலும் கொண்டு எப்படிப் பாடுவது? அவன் பல பெரியவர்கள் பாடும் பாடலேக் கேட்டவன். அவற்றைக் கேட்டவகிைய அவன் நாம் பாடும் பாடலேக் கேட்பாளு? நாம் அவனை எவ்வாறு பாடுவது? அவனைப் பாடும் தன்மை எது?’’

ஏதவனைப் பாடும் பரிசுஏலோர் எம்பாவாய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/53&oldid=579246" இலிருந்து மீள்விக்கப்பட்டது