பக்கம்:திருவெம்பாவை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. எய்யாமற் காப்பாய்

இறைவனிடம் பெண்கள் விண்ணப்பம் செய்து கொள் கிார்கள். நீராடித் தூய்மையுடன் இறைவனை வழிபடுகிற வர்கள் அவர் கள், அவர்கள் சிறு பெண்களாதலின் நீராடும் பொழுது உல்லாசமாக ஆடிக் சளிக்கிருர்கள் அவர்கள் ஆடும் பொய்கையில் தாமரை மலர்கள் மலர்ந்திருக்கின்றன. அவற்றில் வண்டுகள் மொய்க்கின்றன, அத்தனே பேரும் நீராடுவதற்குரிய விசாலமான பொய்கை அது.

மொய்யார் தடம் பொய்கை.

அதிலே அவர்கள் குதிக்கிரு.ர்கள். முகேர் என்ற ஒலி எழும்புகிறது. கையினலே நீரை அள்ளி ஒருவர்மேல் ஒருவர் வீசிக்கொள்கிரு.ர்கள், அப்படி வீசும் பொழுதெல்லாம் இறைவனுடைய திருவடிகளைப் பாடிக்கொண்டே வீக கிருர்கள்.

முகேர்ளன்னக் கையால் குடைந்து குடைந்துஉன் கழல்பாடி.

"இவ்வாறு உன்னிடம் அன்பு வைத்து எது செய்தாலும் உன்னே மறவாமல் நினைக்கிருேம்; பாடுகிருேம். ஐயனே. நாங்கள் பரம்பரை பரம்பரையாக உனக்கு அடியார்களாக இருப்பவர்கள். அவ்வாறு இருப்பதல்ை எங்களுக்கு ஒரு குறையும் இல்லாமல் வாழ்ந்தோம். உண்மையான வாழ்வு இதுதான் என்பது எங்களுக்குத் தெரியும். இது நீயும் அறிந்ததுதானே?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/55&oldid=579248" இலிருந்து மீள்விக்கப்பட்டது