பக்கம்:திருவெம்பாவை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. பாடி ஆடுவோம்

பெண்கள் நீராடும்போது அவர்கள் உடம்பு அசை கின்றன. நீரிலே குதிக்கும்போ காதுகளிலே உள்ள குழைகள் ஆடுகின்றன. - -

காதார் குழையாட. அவர்கள் மார்பிலும், மற்ற அங்கங்களிலும் பசிய பொன்ன லாகிய ஆபரணங்களை அணிந்திருக்கிருர்கள், அவைகள் ஆடுகின்றன.

- பைம்பூண் கலிளும. மலர்களைச் சூடிய கூந்தலும் ஆடுகின்றன.

கோதை குரலாட. அந்தப் பூக்களில் வண்டுகள் மொய்க்கின்றன. அவர்கள் பொய்கையில் குதிக்கும்போது அந்த வண்டுகள் எல்லாம் எழுந்து சேர்ந்து ஆடுகின்றன. -

வண்டின் குழாமாட. 'இவ்வாறு மிகவும் குளிர்ச்சி பொருந்திய புனலில் நாம் ஆடுவோம. மார்கழி மாதமாதலால் புனல் குளிர்ச்சியாக இருக்கிறது. அப்படி ஆடும்போது இறைவனேயும், அவனோடு

சார்ந்த பொருள்களையும் பாடுகிருர்கள். தில்லையில் உள்ள சிற்றம்பலத்தைப் பாடுகிருர்கள்,

சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/68&oldid=579261" இலிருந்து மீள்விக்கப்பட்டது