பக்கம்:திருவெம்பாவை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

já - திருவெம்பாவை

"அவனுடைய தாமர்ை போன்ற பாதங்கள் திருமாலா லும், நான்முகனலும் காணுதன. அதற்கு வணக்கங்கள்’’ என்கிருள்.

போற்றிமால் ாேன்முகனும் காணுத புண்டிரிகம்.

'அவ்வளவு சிறப்புடைய உன்னுடைய பாதங்கள் எங்களை நாங்கள் உய்யும்படியாக ஆட்கொண்டு அருளின. அவற் றுக்கு எங்கள் வணக்கம்.'

போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்.

"நாங்கள் இந்த மார்கழி மாதத்தில் உன்னைப் போற்றி நீராடுவோம்.’’

போற்றியாம் மார்கழிக் ராடுலோர் எம்பாவாய்!

ஒவ்வொர் அடியிலும் போற்றி, போற்றி என்று வருவது, வணக்கம் எனனும் பொருளைத் தருவது.

போற்றி அருளுககின் ஆதியாம் பாதமல்ர்

போற்றி அருளுககின் அந்தமாம் செந்தளிர்கள் போற்றிஎல் லாஉயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் போற்றிஎல் லாஉயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றிஎல் லாஉயிர்க்கும் ஈரும் இணையடிகள் போற்றிமால் நான்முகனும் காளுத புண்டரிகம் போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள் போற்றியாம்.மார்கழிநீராடுஏலோர் எம்பாவாய்!

ஆதியாம் பாதமவர் என்றது, எல்லாவற்றையும் தன்னிடத்திலிருந்து தோற்றுவிக்கும் என்றபடி. எல்லா வற்றுக்கும் முடிவாக நின்று அதற்கு மேலும் நிலைத்திருப்ப தாதலின், நின் அந்தமாம். செந்தளிர்கள்’ என்கிருள். இறைவன் பாதம் சிவந்த தளிர்களைப் போல மென்மையாக இருக்கின்றன. அந்தத் திருவடியிலிருந்தே எல்லா உயிர்களும் தோன்றுகின்றன. சர்வப் பிரளய காலத்தில் அவன் திருவடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/95&oldid=579288" இலிருந்து மீள்விக்கப்பட்டது