பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9


என்னை இம்முறையில் சிந்திக்க வைப்பதற்கு முதற் காரணமாக இருந்த சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியரும், என் ஆசிரியப் பெருந்தகை பேராசிரியர் மு. நடேச முதலியார் அவர்களின் அருமைத் திருமகளுரு மாகிய டாக்டர் ந. சஞ்சீவி அவர்கட்கும், கரும்பு அயிரற்குக் கூலி கொடுக்கும் சென்னேப் பல்கலைக் கழகத்தினருக்கும் என் உளம் நிறைந்த நன்றியைப் புலப்படுத்திக் கொள்ளுகின் றேன். தாமரைச் செல்வர் கெ. து. சுந்தரவடிவேலு அவர்கள் கல்வித்துறை ஜாம்பவான். தம் வாழ்நாள் முழுவதும் கல்விப் பணி ஒன்றிலேயே தம் கவனத்தைச் செலுத்திப் பெரும்புகழ் பெற்றவர். தமிழகக் கல்வி இயக்குநராகப் பணியாற்றிய பல்லாண்டுக் காலத்தில், தொடக்க நில்ை, உயர்நிலை, கல்லூரி நிலைக் கல்வியில் ஊக்கமும் ஆக்கமும் தந்து பால் நினைந் துட்டும் தாயினும் சாலப் பரிந்து அந்நிலைக் கல்விகளின் ஆழத்தையும் அகலத்தையும் பெருக்கி, அவற்றின் தரத்தையும் உய்ர்த்திய பெருமகளுர், சென்னைப் பல்கலைக் கழகத்தின் நூற்ருண்டுக்கு மேற்பட்ட வரலாற்றில் தமி ழறிந்த, தமிழரார்வம் மிகுந்த ஓர் அறிஞர்-தமிழ்க் கல்வித் தொண்டர்-முதன் முதலாகத் துணைவேந்தராக அணி செய்த பெருமை இவரைச் சாரும். இங்ங்ணம் பணியாற்றிய ஆண்டுக் காலத்தில் பல்கலைக் கழகக் கல்வித் தரத்தைப் பல்லாற்ருனும் உயர்த்திய பெருமை இவருக்கே உரியது. இவரது கடைக்கண் பார்வை தமிழ்த்துறைக்கு இருந்ததஞல் அது மிக விரிவாக வளர்ந்து சிறப்புற்றது. இத்தகைய பெரியார் மிகப்பெரிய பொருள்பற்றிச் சிறியேனல் ஆக்கப் பெற்ற நூலுக்கு அணிந்துரை நல்கி ஆசி கூறியமைக்கு என் உளங்கனிந்த நன்றியைப் புலப்படுத்திக்கொள்ளுகின்றேன். தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு. கருளுநிதி அவர்களின் பீடும் பெருமையும் நிறைந்த ஆட்சி இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலுமிருந்தும் ஒரே கருத்துடன் பாராட்டைப் பெற்றுத் திகழ்கின்றது. கலைச்சுவையும்