பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166


166 கிறக்கும் பதக்தொழு துய்ய எண்ணிர் நெறியிற்பிழைத்து மறக்கும்ப தந்தியும் சேலும் அசுணமும் வண்டினமும் பறக்கும் பதங்க மும்போல் ஐவராற் கொடும் பாதகரே. (பதம்-பரமபதம்; செய்ய-சிவந்த நிறக்கும்-நிறம் அமைந்த; பதம்-திருவடி, உய்ய-ஈடேற; எண்ணிர் -தினையுங்கள்; மத்ம்-கோபக் குணம்: கும்பம்-மத்தகம்; தந்தி-யானை, சேல்-மீன்; அசுணம்-ஒருவகைப் பறவை; பதங்கம்-விட்டில்.) - இதில் ஐம்புலன்களின் ஆசையால் கெடுவதற்கு யானை, மீன், அசுணம், வண்டு, விட்டில் ஆகிய ஐந்து பிராணி கள் உவமைகூறப்பெற்றுள்ளன. யானை ஊற்றுணர்ச்சியால் அழியும். எங்ங்னம் என்பதை விளக்குவேன். யானையைப் பிடிக்கும் வேடர்கள் கர்ட்டில் ஒரு பள்ளம் பறித்து அதன் ஒரு புறத்தில் ஒரு பெண் யானையை நிறுத்திக் குழியைத் தழை முதலியவற்ருல் மறைப்பர். மறுபுறத் தில் ஆண்யானை பெண்யானையைக் கூடும் விருப்பால் ஒடி வருகையில் குழியில் வீழ்ந்து மேலேற மாட்டாது அகப் பட்டுக் கொள்ளும், பிறகு அதனைத் தந்திரமாக விலங் கிட்டு மேலேற்றித் தம் வசப்படுத்திக் கொள்வர் எயினர் கள். மீன் சுவையால் அழியும். எங்ங்னம் என்பதைக் கூறு வேன். தூண்டிலில் வைக்கப்பெற்றுள்ள தசையை உண்ணவேண்டும் என்ற அவாவினல் மீன் விரைந்து வந்து அதில் வாயினே வைத்து அம்முள்ளில் மாட்டிக் கொள்ளும். மீளமாட்டாத மீனே வலைஞர் எடுத்துத் தம் கூடையில் போட்டுக் கொள்வர். இங்கு மீன் வாய் (நாக்கு) என்னும் பொறிக்குரிய சுவையின்பத்தின் 沙露总 24. பாடல்-27