பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185


185 "பாணியிறை கொன்றை பணிசூடி மானேக்தி வேணியர னைப்பொருவும் வேங்கடமே." பாணி - நீர்; பணி - பாம்பு வேணி - சடை முடி.1 என்ற அடிகளில் சிவபெருமான் வேங்கடத்திற்கு ஒப்பா கின்ருன். சிவபெருமான் தலையில் கங்கை கொன்றை மலர் பாம்பு இவற்றையும், கையில் மானையும் கொண்டு சடைமுடியுடன் திகழ்வதுபோலவே, வேங்கடமலையிலும் திவ்விய தீர்த்தங்கள்; கொன்றை மரங்கள், நாகங்கள், மான்கள் ஆகியவை இருக்கின்றன. சிவபெருமானின் முடியில் சந்திரன் இருப்பதுபோலவே, உ ய ர் ந் த திருமலையின் மீதும் சந்திரன் தோன்றுகின்ருன். சிவபெருமானிடம் சடை முடியிருப்பதற்கேற்ப வேங் கடத்தில் அடர்ந்த வனம் உள்ளது. - 'மாலாய் சசிதழுவி வச்சிரமேந் திப்புகர்மா மேலாய்ப் புரந்தரம் வேங்கடமே ' (மால் - ஒரு பெயர், பெருமை; சசி - இந்திராணி, சந்திரன்; வச்சிரம் - ஆயுதம், இரத்தினக் கற்கள்; புகர் மா - புள்ளிகளையுடைய ஐராவதம், யானை.) என்ற வரிகளில் வேங்கடம் இந்திரனுக்கு ஒப்பாகின்றது. இந்திரனுக்கு மால் என்ற ஒரு பெயர் உண்டு; இந்தி ராணியைக் கூடியுள்ளான்; வச்சிராயுதத்தைக் கொண் டிருக்கின்ருன்; செம்புள்ளிகளையுடைய ஐராவதம் என்ற யானைமீது ஏறுகின்ருன். அங்ங்னமே, வேங்கடமும் பெருமையுடையதாய், சந்திரன் தன்மீது பொருந்தப் பெற்றதாய்' வச்சிர ரத்தினக்கற்களைத் தன் மேலுடைய 63. பாடல். 5 64. பாடல் - 6 65. சசி . சந்திரன். முயல் வடிவத்தையுடையதென்று காரணப் பொருள்படும். சசம் முயல். சந்திரனிடத்துக் காணப்படுகின்ற களங்கத்தை முயலென்றல் ஒரு வகைக் கவி மரபு. - -