பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71


7t (1) இன்னவின்ன நிலம் இன்னவின்ன தெய்வத் திற்கு உரியதென்று பாகுபடுத்தி நூற்பா செய்யு மிடத்தில் தொல்காப்பியர், திருமாலுக்கு முல்லே நிலமாகிய காட்டையும், முருகனுக்கு குறிஞ்சி நிலமாகிய மலையையும் உரிமையாக்குவதால், மலேநில மாகிய வேங்கடம் முருகனுக்குரியதேயன்றித் திருமா லுக்கு உரியதாகாது என்பது. (2) ஒடியா விழவின் நெடியோன் குன்றம்’ (அகம்-149) என்ற அகநானூற்றுத் தொடரில் நெடியோன் குன்றம்’ என்பதற்கு, முருகன்மலை என்று பொருள் கொள்வது போல், சிலப்பதிகாரத்தில் வரும் நெடியோன் குன்றமும்’ என்ற தொடருக்கும் பொருள் கொள்ளவேண்டும் என்பது. (3) சிலப்பதிகாரம் காடுகாண் காதையில் வீங்கு நீர் அருவி வேங்கடம்' என்பது முதல் செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்’ என்பது வரையிலுள்ள அடிகள் இடைச்செருகல் என்பதும், முருகக் கடவுட்கே வழங்கியிருந்த அடைமொழிகளைப் பிற்காலத்தில் யாரோவொருவர் திருமாலுக்குப் பொருத்தவேண்டிச் "செங்கண் நெடியோன்’ எனச் சிறப்பித்தும், பகையணங் காழியும் பால் வெண் சங்கமும் என்று இராமாநுசர் காலத்துக்கு முன்பில்லாத திருமாலடையாளங்களை இடையிற் புகுத்திப் போந்ததுவுமாகும் என்பது. - இனி, இம் மூன்று காரணங்களையும் ஒவ்வொன்ருக ஆராய முற்படுகின்றேன். முதலாவது காரணம் : குறிஞ்சி நிலத்துக் கடவுள் முருகனேயாதலால் "நெடியோன் குன்றம்’ என்று வேங்கடத்தை மாயோன் மலையாக இளங்கோ அடிகள் கூறினது நியாயம் ஆகாது