பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84


34 சிலவற்றைத்தான் கருதுதல் கூடும். இந்த நூலிலுள்ள பாசுரங்கள் 108 திருப்பதிகளில் அர்ச்சாவதாரமாக எழுந் தருளியுள்ள எம்பெருமான்களைப் பற்றியனவாகும். இந்தப் பாசுரங்களின் பெருமையை வேதாந்ததேசிகர், 'செய்யதமிழ் மாலைகள்நாம் தெளிய வோதித் தெளியாத மறைகிலங்கள் தெளிகின் ருேமே.”* (தெளியாத . விளங்காமலிருந்த மறை நிலங்கள் . வேத பாகங்கள் ! - என்று சிறப்பித்துப் பேசுவர். இவற்றை நாம் பொரு ளுடன் குருமுகமாய்ப் பெற்ருல் இதுவரை நமக்கு விளங்காமலிருந்த வே த வி ழு ப் பொருளையெல்லாம் நன்கு அறிய முடியும் என்று இவற்றின் பெருமையை அறுதியிடுகின்ருர் இந்தச் சுவாமி அவர்கள். - இந்த நூற்றெட்டுத் திருப்பதிகளுள் திருவேங்கட மும் ஒன்று. கோயில், திருமலை, பெருமாள் கோயில் (காஞ்சி) என்று வைணவப் பெருமக்களால் மிகவும் சிறப்பாகப் போற்றப் பெறும் மூன்று திவ்விய தேசங்களுள் இது நடுநாயகமாகத் திகழ்வது. வட நாட்டுத் திருப்பதிகள் பன்னிரண்டனுள் முதலாவதாகக் கூறப்பெறுவது. இதனை அழகிய மணவாளதாசர், "தானே சரணமுமாய்த் தானே பலமுமாய்த் தானே குறைமுடிக்குங் தன்மையான்-தேனேய் திருவேங் கடந்தொழுதேங் தீய விபூதிக்குள் கருவேம் கடந்தனெமிவ் வாழ்வு." 53. தேசிகப் பிரபந்தம்-40. 54. நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி.96.