பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86


85 வேண்டும். வைணவ தத்துவம் சித்து, அசித்து, ஈசு வரன் என்று மூவகைப் பட்டிருக்கும். இதனைத் 'தத்துவத்திரயம்" என்று வழங்குவர் வைணவப் பெரு மக்கள். சித்தும், அசித்தும் ஈசுவரனுக்கு உடலாக அமைந் திருக்கும். இந்த உறவினைச் சரீர-சரீரி பாவனை என்று போற்றியுரைப்பர் அப்பெருமக்கள். அசித்தும் எம்பெருமான் படைப்பாதலால் அதுவும் வழிபாட்டிற் குரியது. - "சென்று சேர்திரு வேங்கட மாமலை ஒன்று மேதொழ நம்வினை ஒயுமே.”* என்ற நம்மாழ்வார் பா சுர ம் இக் கருத்திற்கு அரண் செய்வதாக அமைகின்றது. அசித்தின் பெயரைச் சொன்னவுடனேயே எம்பெருமான் மன மகிழ்ந்து நமக்கு திருவருள் பாலிக்கும் பெருமை பேசப் பெறுகின்றது. "திருமா லிருஞ்சோலை மலைஎன்றேன்; என்னத் திருமால் வந்துஎன் நெஞ்சுகிறையப் புகுந்தான்' என்ற திருவாய்மொழி இதற்குச் சான்ருக நிற்கின்றது. எனவே, அன்பர்களே, அசித்தாகிய வேங்கடமலையில் சில காட்சிகளைக் காண்டலும் இறையநுபவம் பெற்ற தாக அமைகின்றது. இத்தகைய பல அழகிய காட்சிகளை நமக்கு ஆழ்வார் பெருமக்கள் காட்டிச் செல்கின்றனர். அவற்றுள் சிலவற்றை இன்றைய பொழிவில் காட்டு வேன். பூதத்தாழ்வார் காட்டும் காட்சி ஒன்றினைக் காண் போம். திருமலையில் மதப்பெருக்கால் செருக்கித் திரி 55. திருவாய் 3.3:8. 56. திருவாய். 10.8:1. -