பக்கம்:திருவேங்கட மாயோன் மாலை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. இராகவையங்கார் 25 O5). 100. 101. 102. 103. குலமா ருதிபா லழலுங் குளிரச் சொலமாண் மனைதன் சிறைவீட் டொருசொல் இலனே துமிலன் னெளியே னினடைக் கலமே திருவேங் கடமா யவனே." கூவிப் புனல்பெய் கொடைகூர் மடமே மேவிப் புனல்வேட் டனனென் பதுபோல் ஆவித் தருள்வேண் டினனின் னையிறங் காவற் றிருவேங் கடமா யவனே. உமியோ பலவுண் டவலொன் றுணர்வார் தமியேன் செய்நிவே தனந்தா னிதினன் பிமியே னுமிருப் பினதார் வையெலாங் கமியாய் திருவேங் கடமா யவனே. மண்வா னரசன் பிரமன் முதலா எண்ணா வுயிராகுவ வாட்டுவைநீ அண்ணா லசையா துகிடத் தியெலாங் கண்காண் திருவேங் கடமா யவனே. தரனே தெரியா தவரைப் பரவிப் பரணி தரும்வா யினினைப் பரவு முரனே யிலனா யுளன்ஞா னதிவா i கரனே திருவேங் கடமா யவனே. 99. 100. 101. 102. 103. அண்ணால் - தலைவனே. மாருதி - அனுமான், அழல் - நெருப்பு: மனை - மனைவி; துமிலன் - பேராரவாரமுடையன். மடம் - இடம்: மேவி - அடுத்து: ஆவித்து - பெரு மூச்சு விட்டு. உமி - துமி, தமியேன் - தனியேன்; நிவேதனம் - படையல்; ஆர்வை - உட்கொள்ளுவாய்; கமியாய்பொறுப்பாய். - வானரசன் - இந்திரன்; ஆட்டுவை. ஆட்டுவிப்பாய் தரன் - தரம், இயல்பு; பரன் - மேலோன், தெய்வம்; பரவுதல் - துதித்தல்; உரன் - வலிமை; ஞானதிவாகரன் - ஞான சூரியன். -