பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசாங்கம் இறந்தவர்க்கு உதவி செய்ய மறுத்தது: விசாரணை செய்யவும் மறுத்தது. என்ன சிறுமை!

கடைசி வேலை நிறுத்தமும் விளைவும்

1947 ஆம் ஆண்டு நாம் சுதந்திரம் பெற்ற ஆண்டு. அதே ஆண்டு; அதே பக்கிங்காம் கர்னாடிக் மில் தொழிலாளர் பெரியதொரு போராட்டம் நடத்தினர். தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்தோணி பிள்ளை நாடு கடத்தப் பட்டார்.

திரு. வி. க தலைம்ைம பொறுப்பு ஏற்க வேண்டி வந்தது.

போராட்டம்; அமைதியான போராட்டமாக நடந்தது: எவ்விதக் கலவரமோ, கலகமோ இல்லை.

இதற்கு திரு.வி.கவுக்கு கிடைத்த பரிசு என்ன? ‘வீட்டுக் காவல் தண்டனை! நெஞ்சு பொறுக்குதில்லையே! என் செய்வது? தொழிலாளர் திரண்டு வந்தனர். கணபதி முதலித் தெருவிலிருந்து திரு.வி.க வீட்டை நோக்கி.

வீட்டு மாடியில் அமர்ந்திருந்த திரு. வி. க தொழி லாளரிடம் பேசினார். அறுபதாண்டு கடந்த அறிஞர் திரு. வி. க. குரல்கேட்டு,உருவங் கண்டு ஆறுதல் பெற்றனர் தொழிலாளர்; மீண்டும் திரும்பிப் போந்தனர்.*

அவரை அவர்கள் மறக்கவே இல்லை.


திரு. வி. க. தன் தொண்டினைப் பற்றி என்ன கருத்து தெரிவித்து இருக்கிறார்.

  • விரிவுக்கு திரு. சக்திதாசன் சுப்பிரமண்யன் எழுதிய ‘திரு. வி. க. வாழ்வும் தொண்டும்’, பக். 107-118 காண்க,

1 34