பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ற சுதந்திர வேட்கை பீறிட்டு எழுந்த காலம். இந்த வேட்கை எத்தன்மையது? அனுபவ முதிர்வால் ஏற்பட்டதா? அல்லது திடீரென எழுந்த ஏதோ ஒரு இளம் வெறியின் எதிரொலியா?

இதைப் பற்றி ஆராய்வதற்கு உறுதுணையாக உள்ளது ‘இந்தியாவும் விடுதலையும்’ என்ற நூல்.

எந்த ஒரு நாட்டிலும் சரி விடுதலை வேட்கை அந்தந்த நாட்டின் வரலாற்றின் அடிப்படையில் எழுந்ததாக இருக்க வேண்டும். இஃதே நிலைத்திருக்கும்.

‘அச்சமில்லை, அச்சமில்லை’ என்ற வீறு நடை போடும் திரு.வி.கவின் இந்த நூல், வேட்கையின் காரண அடிப்படை, வளர்ச்சி, ஏனைய பிற விவரங்களைப் பற்றி மிகத் தெளிவாகக் கூறும்.

1940க்கு முற்பட்ட காலத்தை இந்திய வரலாற்றின் படி மூன்று கூறுகளாகப் பிரிக்கிறார் திரு.வி.க.

இந்தியா பெயர்க் காரணத்தை விளக்கியபின், முற்கால இந்தியாவின் செழுமை, நேர்மை, அந்தண்மை பற்றி சொல்லோவியம் ஒன்றையே தீட்டி விடுகிறார் திரு.வி.க.

முற்காலம் மாறி இடைக்காலம் வருகிறது. இந்தியாவும் இக்காலத்திற்கேற்ப இடைக்கால வரலாற்றைப் பெறுகிறது.

இடைக்காலத்தில் நலிவுற்ற இந்தியாவையே காண் கிறோம். இதற்குக் காரணம் எங்கும் திடீரென ஏற்பட்ட குழப்ப நிலை; அரசியல் கிளர்ச்சிகள், கலகங்கள். மத்திய ஆட்சியை அசைத்து அதன் பலத்தைக் குறைத்து மாநிலங்கள் ஈடுபட்ட தன்னல செயல்களே இந்த நலிவுக்குக் காரணம்.

இடைக்கால முடிவில் தோன்றியது முஸ்லிம் உலகம். அதனையடுத்து வரும் வரலாறு தற்கால இந்திய வரலாறு.


f 3 &