பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியர்’ என்ற உணர்வு தோன்றுமா? தோன்றினால் நிலைக்குமா?

அரசியலில் அறநோக்கு

அறநோக்கு இன்றேல், வகுப்பு வாதம் மிகுமன்றோ? சட்டசபை பதவி சமய அடிப்படையில் அமைவதாக இருந்தால் வகுப்பு வாதம் எவ்வாறு குறையும்? வகுப்பு வாதப் பேய் தலைவிரித்தாட பத்திரிகைகள் செய்யும் கைங்கரியங்கள் எத்தனை, எத்தனை! மேல் நாட்டு நாகரீகத் தின் அடிமைகள் நம் நாட்டு அன்புவழியை பேணுவாரோ? இச்சூழ்நிலையில் சுதேசியம் அழியாமல் என் செய்யும்? பேராசை பேயாட்டம் ஆடாமல் என் செய்யும்?

இதற்கு மாற்று உண்டோ? உண்டு; நிச்சயம் உண்டு. அதுவே சமதர்மம், இதனையே காரல் மார்க்ஸ் தம் சித்தாந்தத்தில் விளக்குகிறார். அருளுடைமை சமதர்மம்; பொருளுடைமை மார்க்ளியம். இவ்வழியில் மக்களை ஆள்வோர் தன்னலமற்றவராய், பற்றற்றவராய், தியாக சிந்தை உடையவராய், நாட்டு நலனே முக்கியம் என கருதுவோராய் இருப்பது நல்லது. இன்றேல் அழிவுதான்! சும்மா வருமா உலக சகோதர நேயம்?

அரசியல், பொருளாதார-நாட்டு விடுதலை

அரசியல் பொருளாதார நாட்டு விடுதலைக்காக எழுந்த இயக்கங்கள் பல; அமைப்புகளும் பற்பல அவைகளைப்பற்றி அனைவரும் அறிந்திருப்பார்கள். இவைகளில் சாதிக்கோ, மதத்துக்கோ, ஏதோ ஒரு குறிப்பிட்ட மாகாணத்துக்கோ, சேர்ந்தது அல்லது காங்கிரஸ். இந்த உண்மை அனைவரும் அறிந்ததே. பல திற இடுக்கண்களிடை காங்கிரஸ் வளர்ந்த கதையும் பிரபலமானதே.

I 54