பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துள் முன்பே அமைக்கப்பட்டன. இதன் அடித்தளமான அறமோ இங்கே வைக்கப்பட்டது. ஏன்? முறைமாற்றம் அறத்தின் வலிமையை அறிவுறுத்தவே. சாதாரணமாக ‘அறன்’ என்று மட்டும் தலைப்பு கொடுக்கப் படவில்லை. ‘அறன் வலியுறுத்தல்’ என்ற தலைப்பு கொடுக்கப்பட்ட தற்கும் இதுவே காரணம். ஒன்றிய உள்ளத்துடனும் நம்பிக் கையுடனும் உண்மை அறத்தை மக்கள் பயிலல் வேண்டும் என்பது ஆசிரியரின் நோக்கம் போலும்!

நான்கு பொருட் பிரிவு

இவ்வதிகாரத்தில் விளங்கும் பொருளை நான்கெனக் கூறலாம். 1. அறத்தின் விழுப்பம்

இது பற்றி முதலிரண்டு குறட்பாக்கள் கூறும். 2. அறத்தின் இயல்

அடுத்து வரும் இரு குறட்பாக்களும் அறத்தின் இயல் பற்றியன. 3. அறச் செயல்

ஐந்து, ஆறு குறள்கள் மூலம் இப்பொருள் கூற வைத் தார் வள்ளுவர்.

4. அறப்பேறு

குறட்பாக்கள் ஏழிலிருந்து பத்து வரை இப்பகுதி விளக்கம் பெறும். பொருள் பாகுபாடு: ஏன்?

ஒன்று விழுப்பமுடையதெனின் அதன்மீது சிந்தை செல்வது இயற்கை. அது விழுப்பமுடையதா என்ற தெளிவு பெறுவதற்காக சிந்திக்க, சிந்திக்க அதன் இயல் இனிது

33