பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

146

சாதிச் சைவர் மற்றவரைத் தீண்டாதார் என்று கருதுவர். திருநீறும், உருத்திராக்கமும் தரித்த சாதிச் சைவர், உணவு வேளையில் தனியறை காடுவர். சாதிச் சைவரின் கொடுமைகளை மறுத்தார் திரு.வி.க.

சைவ சித்தாந்த மகா சமாஜ மேடைகளில் பேச நேர்ந்தபோதெல்லாம் சாதிச் சைவரின் செயல்களைக் கடிந்தார் திரு.வி.க. இதை ஒரு தொண்டாகக் கருதிர்ை.

பங்காரு பத்தர் என்பவர் ஒரு தமிழ்ப்புலவர். புதுவையிலே கலைமகள் கழக ஆண்டு விழாக்களைச் சிறப்பாக கடத்தி வந்தார் அவர். ஆண்டுதோறும் ஞானியார் சுவாமிகளே அவ்விழாவுக்குத் தலைமை தாங்குவார். ஒவ்வோராண்டும் திரு.வி.க சொற்பொழிவு நிகழ்த்த அழைக்கப்படுவார்; அவ்வழக்கப்படியே 1915ம் ஆண்டும் அழைக்கப்பட்டார். தேவப் பிரசாதம் பண்டிதர் எனும் பெயர் கொண்ட கிறிஸ்தவ நண்பர் ஒருவரும் திரு.வி.க.வுடன் சென்றார். சாதிச் சைவர் ஒரு கிறிஸ்தவருடன் உணவு கொள்ள இசையார் என்ப தைத் திரு.வி.க அறிவார். எனவே, அவரும் கண்பரும் புதுவை தியாசோபிகல் சங்கத்தில் தக்க ஏற்பாடு செய்து கொண்டனர்.

மணம் பூண்டி குமாரசாமி பிள்ளை என்பவர் திரு.வி.கவின் தோழர் தமிழ் அறிஞர்; சீர்திருத்த கேயர். கிறிஸ்துவ கண்பர் ஒருவரையும் அவர் அழைத்து வந்தார். இதனை அறிந்தார் திரு.வி.க. அந்த கண்பரையும் தம்முடன் தங்குமாறு வேண்டினர். கண்பரும் இணங்கினர்.

மடத்துச் சைவர் ஒருவர், திரு. வி. க. கிறிஸ்து வருடன் உணவு கொண்டதைக் கூட்டத்தில் வெளி