பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

156

டனர். இங்கிலையில் ஜே. எஸ். கண்ணப்பரின் ஏவுதலால் குறும்பு ஒன்று நடை பெற்றது. என்ன குறும்பு?

கூட்டத்திலே குழப்பம் விளைத்துக் கூட்டத்தைக் கலைத்துத் திரு. வி. க.வையும் நையப் புடைக்க வேணடும் ஏன்னும் ஏற்பாடு.இந்த ஏற்பாட்டுக்கென்று சதிக் கூட்டம் ஒன்றும் திரண்டது. அக்கூட்டம் என் செய்தது? குண்டர்களுக்குக் கூலி கொடுத்தது. வேண்டிய ஏற்பாடும் செய்தது. இவ்வாறு ஏற்பாடுகள் செய்தபின் அது பற்றி ஜே. எஸ். கண்ணப்பருக்கு அறிவித்தது.

சென்னையில் இருந்த ஜே. எஸ். கண்ணப்பர் என் செய்தார்? ‘திராவிடன்’ பத்திரிகையின் முதல் பக்கத் திலே கொட்டை எழுத்துக்களில் பின் வருமாறு வெளியிட்டார்.

திரு. வி. கலியான சுந்தரனுருக்கு அடி; கூட்டம் குழப்பத்தில் முடிந்தது. சென்னை அன்பர் சிலர் திராவிடன் பத்திரிகை யைக் கண்டனர். கெஞ்சம் பதைத்தனர். திரு. வி. உலககாதரிடம் ஓடினர்; பத்திரிகையைக் காட்டினர். *செய்தி என்ன என்று உசாவினர்.

‘திராவிடன் பத்திரிகை கண்டார் உலககாதர்; அன்பர் தம் பதைப்புக் கண்டார். மனம் கலங்கினர். உடனே தக்தி ஒன்று கொடுத்தார். எங்கே? விருது

ககருக்கு.

விருதுநகர் ஆண்டு விழாவில் என்ன கடந்தது? முதல் காள் கூட்டம் அமைதியாக கடந்தது. இரண் டாம் காள். மேடை மீதேறி அமர்ந்தார் திரு. வி. க.