பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பத்திரண்டாம் ஆண்டு. திருவையாற்று அரசர் கல்லூரியிலே தமிழ் வித்து வான் படித்துக் கொண்டிருந்தேன் நான்.

எங்கள் கல்லூரி மாணவர் பலரும் சேர்ந்து ஒரு கழகம் அமைத்திருந்தனர். அக்கழகத்தின் பெயர் திருவள்ளுவர் கழகம் என்பது. அதன் அமைச்சராக விளங்கியவர் சிவகுரு நாதன் என்பவர்.

திருவள்ளுவர் கழகத்திலே தமிழ் நூல்கள் பல இருந்தன. அந்நூல்கள், மாணவர்க்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்தன. ஒய்வு நேரங்களிலே அந்நூல்களைப் படிக்கலாம். படித்துப் பயன் பெறலாம். இக்கருத்துக் கொண்டே அந் நூல்கள் அங்கு வைக்கிப்பட்டு இருந்தன.

ஒருநாள் திருவள்ளுவர் கழகத்திலே இருந்த நூல்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன். என்னைக் கவர்ந்தது ஒருநூல். அந்நூலின் பெயர் மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்’ என்பது. அந்நூல்ை எழுதியவர் யார் என்று நோக்கினேன். திருவாரூர் வி. கலியாண சுந்தரன்’ என்றிருக்கக் கண்டேன்.

நூலை எடுத்தேன்; பக்கங்களைப் புரட்டினேன். அதில். தோய்ந்தேன்; மூழ்கினேன்; முங்கினேன்; ஆழ்ந்தேன்; அமிழ்ந்தேன்.

அந்நூல் என்னைக் கவர்ந்ததன் காரணம் என்ன? காரணம் சூழ்நிலை என்பேன். சூழ்நிலை எவ்வாறு இருந்தது? விடுதலை வேகம் எங்கும் கொந்தளித்துக் கொண்டிருந் தது. உப்புப் போராட்டம் ஒய்ந்து விட்டது. கள்ளுக் கடை மறியல் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தது.

கோயில் நுழைவு வேண்டி உண்ணுவிரதம். திண்டாமை ஒழிப்புப் போராட்டம். இவ்வாறு எங்கும் போராட்ட மேகங்கள் இடித்தன; குமுறின; முழங்கின.