பக்கம்:திரு. வி. க.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 அச. ஞானசம்பந்தன்

திருவுள்ளம் என்ற நூலில் 1927ஆம் ஆண்டில் சமரச சன்மார்க்கம் பற்றி இப்பெரியார் கீழ்வருமாறு எழுதுகிறார்:

“சமரச சன்மார்க்க சங்கத்தின் தலைவர் எல்லாம் வல்ல கடவுள்; அமைச்சர் இயற்கை அன்னையார் நிருவாக அங்கத்தவர் மெய்யறிவு பெற்று அருள் நெறி ஓம்பிய அடியவர்; சந்தா, தயை என்னும் அருள். இச் சந்தா செலுத்துவோர் அனைவரும் உறுப்பினராவர். சமரச சன்மார்க்க சங்கம் நண்ண விரும்புவோர் இவ்வமைப்பு முறையைக் கருத்திலிருத்தி வாழ்வு நடாததுவாராக.”. வள்ளலார் கருத்துப்படி சமரசப் பகை யாது?

இதைவிடச் சிறந்த முறையில் சமரச சன்மார்க்கம் பற்றி யாரும் கூறமுடியாது. திரு.வி.கவிற்கு இக்கருத்துத் தோன்றுதற்கு உறுதுணையாக இருந்த இராமலிங்க வள்ளலார் சமரச சன்மார்க்கத்திற்கும் பகையாய் இருப்பவை எவை எவை என்று இதோ பேசுகிறார்:

“எல்லாமுடைய அருட்பெருஞ்சோதி அற்புதக் கடவுளே! இது தொடங்கி, எக்காலத்துக்கும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகா சார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்தில் பற்றா வண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க் கத்தின் முக்கிய இலட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப் பாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும், எவ்விடத்தும் எவ்விதத்தும், எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும். எல்லாமாகிய தனிப்பெருந் தலைமை அருட்பெருஞ்சோதி ஆண்ட

இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம், பக்கம் 1.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/106&oldid=695391" இலிருந்து மீள்விக்கப்பட்டது