பக்கம்:திரு. வி. க.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இச் 115

முன்னரும் குறிப்பிட்டுள்ளேன். ஆனால், அவர் நடு நிலையுடனிருந்து உண்மை காண்பவரேயன்றி வெறி காரணமாக ஒருபாற் கோடுதலுற்றுப் பேசுபவரல்லர். மார்க்கிலத்தில் எத்துணைப் பற்று வைத்திருப்பினும் இந்த நாட்டின் ஆதாரமான கொள்கைகட்கு அவை எடுபடுமா என்பதை நடுநிலையுடன் ஆய்ந்துள்ளார். அது கடவுளை ஒத்துக் கொள்ளாதது என்ற காரணத்தால் பெரியார் அதனை ஒதுக்கவில்லை. பிரகஸ்பதியின் சார்வாக மதம் வேதத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பெற்ற ஒன்று. அப்படியானால் சார் வாகத்தை இக்கால முறையில் கூறும் மார்க்கிஸத்தை யாரும் வெறுக்கவேண்டிய தேவை இல்லை. அந்தந்த நாட்டிற்கேற்ப மார்க்கிலம் வளரும் இயல்புடையது என்பதே பெரியார் கொள்கை. ரஷ்யாவிலுங்கூட மார்க்கிலம் உள்ளபடியே வளரவில்லை என்றும் முன்னர் லெனினிசமாகவும், பின்னர் ஸ்டாலினிசமாகவுமே வளர்ந்து வருகிறது என்று 1947-லேயே பெரியார் கூறினார்.

தீர்க்கதரிசனம்

இக் கடைசிச் சொற்றொடர் எத்துணை தீர்க்க தரிசனத்துடன் கூறப்பெற்றுள்ளது என்பதை இன்று நாம் அறிய முடிகிறது. தாம் தாம் கூறுவதே உண்மையான மார்க்கிஸம் என்று ரஷ்யாவும் சீனாவும் தம்முள் போரிடுகின்றன. மார்க்கிஸ்த்தையே மாற்றியமைத்து விட்டனர் என ரஷ்யரை சீனர் குறை கூறித் துற்றவும் செய்கின்றனர். மார்க்கிஸத்தைத் தலைகீழாகப் புரட்டி விட்டனர் என சீனரை ரஷ்யர் குறை கூறுகின்றனர். ரஷ்யாவைப் பொறுத்தமட்டிலுங்கூடப் பெரியார் கூறும் முறையில், லெனின் காலத்தில் ஒருவிதமாகவும், ஸ்டாலின் காலத்தில் ஒருவிதமாகவும், குருஷேவ் காலத்தில் ஒரு விதமாகவும், இன்று ஒருவிதமாகவும் மார்க்கிலம் பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/125&oldid=695412" இலிருந்து மீள்விக்கப்பட்டது