பக்கம்:திரு. வி. க.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 அச. ஞானசம்பந்தன்

தன்மையினின்றும் முகிழ்த்த வாழ்க்கை, அரசு, கல்வி, தொழில், நாகரிகம் முதலியனவுஞ் சேர்ந்த ஒன்றே நாடு என்பது.”*

பிற நாடுகளில் குடியேறிய தமிழர்கள் பற்றிய பிரச்சினை இன்றுபோல் எழாத அந்த நாளிலேயே திருவிக அவர்கள் தீர்க்க தரிசனத்துடன் இவ்வாறு எழுதியது அவருடைய கூர்மையான வரலாற்று அறிவுக்கு எடுத்துக்காட்டு.

ஆதி மது பற்றிய குறிப்பு

இந்தியர்களின் முற்கால வாழ்க்கை ஆதி மது என்பவருடைய தத்துவங்களை ஒட்டியே எழுந்தது என்று பெரியார் குறித்துச் செல்கிறார். மேல்நாட்டு வாழ்க்கை “பிளேட்டோ’ ‘அரிஸ்டாட்டில்’ போன்றவர்களுடைய தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு தோன்றியது என்றும் கூறுகிறார். ஆனால், பிளேட்டோவும் அரிஸ் டாட்டிலும் தோன்றுதற்குப் பன்னூறு ஆண்டுகளின் முன்னரேயே எகிப்திய, சுமேரிய நாகரிகங்கள் நன்கு வளர்ச்சியடைந்திருந்தன. கிழக்கே சீனாவில் கன்பூவியஸ் வகுத்த வாழ்க்கை நெறி நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால், திரு.வி.க. அவர்கள் இவை பற்றி ஒன்றுங் குறிப்பிடவில்லை. ஆதி மதுவைப்பற்றி அவர் கூறுவதும் ஏற்புடையதாகத் தெரியவில்லை. முற்கால இந்தியர் வாழ்க்கையினடியில் தர்மம் நிலவிக் கொண்டிருந்தது (பக்கம் 3) என்றும், அதன் அடிக் குறிப்பில் ஜைனம் தன் கொள்கையைத் தர்மம் என்றே கூறுகிறது என்றும் பெரியாரவர்கள் எழுதிச் செல்வது பற்றி இன்னும் நன்கு ஆராய வேண்டும்.

இந்தியாவும் விடுதலையும், பக்கம் 35.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/130&oldid=695418" இலிருந்து மீள்விக்கப்பட்டது