பக்கம்:திரு. வி. க.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 151

“தீமையை மூர்க்க சக்தி கொண்டு களைய நமக்கு உரிமை இல்லை. அத் தீமைக்கும் நமக்கும் தொடர்பின்றி ஒதுங்கி நிற்கவேண்டும்” (பக்கம்-48) மகாத்மாவின் ஒத்துழை யாமை இயக்கத்தின் உயிர்நாடிகள் மேலே கூறப்பெற்ற தொடர்கள். தமிழ்நாட்டில் பிறந்து, திருக்குறளில் வளர்ந்து, தேவார திருவாசகங்களில் ஊறி, சமரச சன்மார்க்கியாகப் பண்பட்ட திரு. வி. க. போன்ற ஒருவரை மேலே கூறிய சொற்றொடர்கள் கவர்வதில் வியப்பு ஒன்றுமில்லை. அன்றியும், மகாத்மாவின் ஒத்துழையாமை, அரசியல் என்ப வற்றின் அடிப்படையில் சமய வாழ்வு மலர்ந்திருந்தது. சமய வாழ்வில் மூழ்கிய திரு. வி. க. விற்கு மகாத்மாவின் கொள்கை முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு வேறு ஒன்றும் தேவை இல்லை.

நலம் நாடுவார்

நலம் கண்டவிடத்தில் அதனைத் தேவையான அளவு ஏற்றுக்கொள்பவர் திரு.வி.க. கார்ல் மார்க்ஸின் தத்துவம் நிரீஸ்வர வாதத்தில் தோன்றியிருக்கலாம். ஆனால், ஒருவன் உண்டு கொழுத்திருக்க, அவன் கொழுப்பதற்குக் காரண மான உழைப்பை நல்கியவன் ஒய்ந்துபோதல் தவறு என்ற வாதம் திரு. வி. க. விற்கு ஏற்றமாய்ப்பட்டது. எனவே, சமயவாதியாகிய திரு.வி.க. (அந்த அளவில்) மார்க்கிஸத்தை ஏற்றுக்கொண்டார். ஆனால், மார்க்கிஸம் மனித மனத்தைப் பற்றிக் கவலைப்படவில்லையே என்ற குறை இருந்துவந்தது. காந்தீயம் அந்தக் குறையைப் போக்கிற்று. எனவே, திரு.வி.க. வின் அரசியலில் மார்க்ஸும் காந்தியும் இடம் பெற்றனர். இதில் ஒரு வியப்பு என்னவெனில் இவை இரண்டு கொள்கை களும் இரு துருவங்களாகும். மார்க்கிஸத்தில் வழியைப்பற்றிக் கவலைப்படாமல், வன்முறையை ஏற்றாவது பொதுவுட மையை நிலைநாட்ட வேண்டும் என்ற கொள்கை வலி யுறுத்தப் பெற்றது. காந்தியத்தில் பயனைவிட வழியே மிகமிக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/161&oldid=695452" இலிருந்து மீள்விக்கப்பட்டது