பக்கம்:திரு. வி. க.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 185

காட்டிலுள்ள சந்தியாசிகளே! வீட்டிலுள்ள சந்நியாசிகளே ! நிஷ்டை கூடியுள்ள சந்தியாசிகளே! தவத்திலுள்ள சந்தியாசிகளே! சமாதியிலுள்ள சந்நி யாசிகளே! எழுந்து வாருங்கள். காந்தியடிகளுக்கு துணைபுரியுங்கள்.

சூட்சும தேகந் தாங்கி உலவிவருஞ் சித்தர்களே! உங்கள் உதவி இப்பொழுது இந்தியாவிற்கு வேண்டும்.

சத்திய சொரூபனே! சத்தியாக்கிரகமென்பது உன் வடிவம். வேண்டுவ செய்வாயாக.”.

உணர்ச்சியால் நடை வேறுபாடு

இந்த எடுத்துக்காட்டுகளும் தேசபக்தனில்’ வந்தவையே. 1918-19-ல்கூட உணர்ச்சி வசப்பட்டு எழுத வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் திரு.வி.க.வின் நடையில் ஒரு புரட்சி அல்லது மாறுதல் ஏற்படும் என்பதைக் காண முடிகிறது. சாதாரண கருத்துகளை எழுதும் பொழுது ஏனையவர்களைப்போன்றே சாதாரண நடையில் எழுதிய திரு.வி.க., அதே காலத்தில் தம் உள்ளத்துணர்ச்சியை வெளியிடவேண்டிய சந்தர்ப்பம் நேரிட்டால் புது வகையான நடையைக் கையாண்டுள்ளார். இவை அனைத்தும் தேசபக்தன்’ பத்திரிகையில் 1917 முதல் 1919-க்குள் வெளி வந்தவைதாம். 1918இல் தமிழ் தனித்தியங்கும் ஆற்றல் படைத்த தனிமொழியன்று என்று பேசும் சிலர் பெரிய மனிதர்களாக விளங்கிப் பல்கலைக் கழகத்திலும் உயர்ந்த இடங்களில் அமர்ந்திருந்தனர். வேறு செல்வாக்குகள் காரணமாக இவன் அமர்ந்த அந்த அறிவாளிகள் தம் அரிய கருத்துகளைத் திருவாய் மலர்ந்து உலகுக்கு அறிவித்தனர். இது கண்ட நம் அறிஞர் வீறு கொண்டெழுந்த தேசபக்தனில் 12-3-1918இல் பின் வருமாறு எழுதியுள்ளார்:

தேசபக்தாமிர்தம், பக்கம் 83, 84.

  1. 3–
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/195&oldid=695489" இலிருந்து மீள்விக்கப்பட்டது