பக்கம்:திரு. வி. க.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 அச. ஞானசம்பந்தன்

பின்னே கெட்டான் என்னே செய்வது? ஒருவன் பொருளை ஒருவன் கவரும் இழிவு வளரும் வழியைக் கண்டான்; கொலையுங் களவுங் கள்ளுங் காமமும் பொய்யும் வாழ்வில் மொய்த்துக் கொண்டன சுரண்டல் வாழ்வு திரண்டு மதர்த்தது செயற்கை வாழ்க்கையில் பயிற்சி பெற்றான் வளர்ச்சி வாழ்வில் உணர்ச்சி யற்றது; ஞாயிறும் திங்களும் மாபே ருடுக்களும் சொள்ளி நிபுலையும் வெள்ளி வீதியும் பிறவும் விண்ணில் முறையே துணைசெய்மலையும் காடும் வயலும் கடலும் மண்ணில் சூழ்ந்து நண்ணித் துணைசெயவளர வந்தவன் தளர்ந்து வீழ்ந்தான்; சுரண்டல் வாழ்வில் புரளு கின்றனன் அத்தைப் பயிலும் வித்தை எங்கும் அரசுகள் எங்கும் முரசுகள் எங்கும் குண்டுகள் எங்கும் தண்டுகள் எங்கும் எத்தனை போர்கள்? எத்தனை மரணம்! அச்சோ! மனிதன் செத்தே போனான்.”

இதுவரை எடுத்துக்காட்டப் பெற்ற பாடல்கள் எந்த ஒரு முறைபற்றியும் தொகுக்கப்படவில்லை. பாடல் பாடும் திறத்தில் அறிஞர் எங்ஙனம் வளர்ந்துள்ளார் என்பதைக் காட்டவே இவ்வெடுத்துக்காட்டுகள்.

கவிஞர் திரு.வி.க.

காவிய உள்ளம் படைத்தவர் திரு.வி.க. கவிஞனின் கற்பனைக் கண்கொண்டு மானிட வாழ்க்கையையும்,

வளர்ச்சியும் வாழ்வும், பக்கம், 22, 23.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/212&oldid=695508" இலிருந்து மீள்விக்கப்பட்டது