பக்கம்:திரு. வி. க.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 அச. ஞானசம்பந்தன்

அவற்றால் ஒவ்வோர் அளவில் கட்டுப்பட்ட அன்பு கூடலாம். கட்டுப்பட்ட அன்பால் அமைதி நிலை

பெறாது. ஒருவேளை அதனால் கலாம். விளையினும் விளையும்.

பரந்த அன்புக்கு, எல்லையற்ற-கட்டற்றஒன்றன் தொடர்பு தேவை. எல்லையற்ற-கட்டற்றஒன்று எங்குமுள்ள இறையன்றிப் பிறிதில்லை. இறை யுடன் தொடர்பு கொள்ளக்கொள்ள, அத் தொடர்பு, தன்னுயிரிலும் மற்ற உயிர்களிலும் உள்ளது ஒன்றே என்னும் உணர்வை நல்கும். எல்லையற்று-கட்டற்றுஎங்கும் நீக்கமற நிறைந்துள்ள அகண்டத்தில் அன்பு கொண்டவரிடம், தம்முயிரைப்போல் மற்ற உயிர்

களைக் கருதும் சகோதர நேயம் தானே பிறக்கும்.

பராபரம் எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்து நிற்றலால், அதற்கு உயிர்களெல்லாம் உறுப்புகளா கின்றன. ஒருறுப்புக்குத் துன்பம் நேரின், அத் துன்பம் மற்ற உறுப்புகட்கும் நேர்தல் இயல்பு. தன் உறுப்புகளில் எதற்காவது கேடுகுழ அறிவுடைய எவனாதல் நினைப்பனோ? எவனும் நினையான். எங்குமுள்ள பராபரத்துடன் தொடர்புகொண்ட ஒருவன், பிறருக் குத் தீங்கு செய்தல் தனக்கே தீங்கு செய்தல் ஆதலை நன்கு உணர்வன். ஆகவே, எங்குமுள்ள பராபரத்துடன் தொடர்புகொள்வதால், சகோதர நேயம் பிறக்கும் என்பது தெளிதற்பாலது. அதனால் உண்மை அமைதி நிலவும்.

. ‘சகோதர நேயத்தால் உலகில் அமைதி நிலை பெறுதல் வேண்டும் என்னும் பெருங்கருணையால், ஆன்றோர், பராபரம் எங்குமுள்ள உண்மையைப் பல

  • கலாம் - பூசல்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/42&oldid=695559" இலிருந்து மீள்விக்கப்பட்டது