பக்கம்:திரு. வி. க.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 65

அழகில் ஈடுபடுபவனாகிறான். அழகில் ஈடுபடாத மனிதர் களே இல்லை. ஏன்? மாக்கள் என்று இழித்துக் கூறப்பெறு பவர்களும் அழகில் ஈடுபடுகின்றனர். உயிர்களை ஈர்ப்பதற்கு அழகு உறுதுணையாக இருக்கிறது எனில் அந்த அழகு எதன் மூலம் வெளிப்படுகிறது? இயற்கையின் மூலமே அழகு வெளிப்பட்டு நிற்கிறது? அழகுக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பை என்னென்று கூறுவது? அழகு எங்கே உறைகிறது? இயற்கையிலா அன்றித் தனித்தா? தனித்து நிற்கும் அழகைக் கணித்து அறிவதும் அனுபவிப்பதும் அனை வர்க்கும் இயலக்கூடிய ஒன்றன்று. தாகூர் கீதாஞ்சலியில் பின் வருமாறு அழகைப்பற்றிப் பாடுகிறார்:

“அழகே நீ எங்கே உறைகின்றாய்? வண்ணப் பூவின் இதழில் நீ உறைகின்றாய் என்று நினைத்து அப்பூவைப் பறித்தால், புறவிதழும் அகவிதழும் என் கையில் இருக்கின்றனவே தவிர நீ இல்லை! எங்கே சென்றுவிட்டாய்!”

இப்பாடல் மூலம் இயற்கையை உடலாகக் கொண்டு விளங்கும் மலரில் அழகு நுண்பொருளாகவே உள்ளது என்ற கருத்தை அறிவிக்கின்றார். உடலில் உயிர் தங்கி யிருப்பினும், தங்கியுள்ளது என்பதை நாம் உணர முடிந்தாலும், உயிரின் நுண்மை இயல்பு காரணமாக அதனைத் தனியே பிரித்து அறிய முடிவதில்லையல்லவா?

அழியா அழகு

- அழகாகிய நுண்பொருள் இயற்கையாகிய பருப் பொருளுடன் ஊடுருவி நின்று தன் இருப்பை உணர்த்தி நிற்கின்றது. இவை இரண்டிற்குமுள்ள தொடர்பு. பிரித்தறியக் கூடாத ஒன்றாகும். பிரித்துக் காண இயலாதிருக்கின்ற மையின் அழகை இல்பொருளென்று தவறாக முடிவு செய்து விட வேண்டா. இயற்கை பலப் பல வடிவங்களாகத் தோன்றித் தோன்றி மறையினும் அதன் முதல் கேடுறுவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/75&oldid=695595" இலிருந்து மீள்விக்கப்பட்டது