பக்கம்:திரு அம்மானை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88. திரு அம்மானை பட்டு அவற்றிற்கு இரை தேடுவதையே தொழிலாகக் காலத்தைக் கழிக்கிருர்கள்; புல் கிலத்திலே மேய விட்ட மாடுகளில் குருட்டுமாடு வீட்டை அடைய முடியாமல் எங்கெங்கோ திரிந்து அல்லல்படுவதைப் போல இன்னல் உழந்து திரிகிறர்கள்; அதன் பயணுக மேலும் மேலும் . பிறவிக்கு ஆளாகிருர்கள்; இடம் மாறி மாறிப் பிறக் கிருர்கள்; லட்சியத்தை அடையாமல் அவர்கள் தப்பிப் போகிருர்கள். . ஆல்ை இறைவன் திருவருளே விரும்பி அவனிடம் அன்பு செய்யும் பக்தர்கள் இவ்வாறு வழிதப்பிப் போவ தில்லை; தம்முடைய லட்சியமாகிய இறைவன் தாளே நோக்கிப் பயணம் செய்து அதை அடைகிருர்கள்; பிறவிப் பெருங்கடலைக் கடப்பதற்கு அதுவே புணே என்பதை உணர்ந்து அதனை அடைகிருர்கள். தப்பாமே தாள் அடைந்தார். தாளே அடைவ்தாவது அவன் திருவடியை இடை விடாது நினைத்தல். "மலர்மிசை ஏகினன் மாண் அடி சேர்ந்தார், நிலமிசை மீடு வாழ்வார்' என்ற குறளின் உரை யில், சேர்தல்-இடை விடாது கினைத்தல் என்று உரை எழுதுவார் பரிமேலழகர். - அவ்வாறு தாளே அடைந்தவர்கள் இறைவனுடைய திருவுருவத்தையும் அனந்த கல்யாண குணங்களேயும் நினைந்து நினைந்து உருகுவார்கள். அவர்களுடைய கெஞ்சத்தில் கோயில் கொண்டு இறைவனே உருகச் செய்வான். . "உண்ணின்றுருக்குவர் ೨rGT என்னும்' என்று பிறிதோரிடத்தில் மணிவாசகர் பாடுவார். கல்லப் போன்ற திண்மையை உடைய நெஞ்சாலுைம் அது இறைவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/102&oldid=894691" இலிருந்து மீள்விக்கப்பட்டது