பக்கம்:திரு அம்மானை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாலக்கு அப்பால் 93. ஒரு பெரிய செல்வருக்கு ஒருவன் தன் வீட்டை விற்றுவிடுகிருன். அந்த வீடு முன்பு குப்பை நிறைந்து, பார்ப்பதற்கு அழகு இல்லாமல் இருந்ததுதான். செல்வன் அதை வாங்கினல் அப்படியே குடிபுகமாட்டான். அதைத் தன் செல்வத்தைக்கொண்டு விரிவாக்கி அழகுபடுத்தி அதில் வாழத் தொடங்குவான். * - - அடியவர்கள் உள்ளமும் ஆரம்பத்தில் ஏழையின் வீடாக இருக்கும்; அழுக்கடைந்திருக்கும். ஆல்ை இறை வகிைய பெருஞ்செல்வனிடத்தில் அதை ஒப்படைத்து விட்டால் அவன் அதைத் தூய்மைப்படுத்துவான்; மாசுடன் கலந்த பொன்னே உருக்கித் தூய்மைப்படுத்துவதுபோல மனத்தை உருக்கித் தூய்மைப் படுத்துவதுவான். அவனே தன் அடியார் மனத்தைத் துரயதாக்கி அங்கே சலனமின்றித் தங்குவான். இனி அந்த உள்ளம் அடியாருடையதன்று; அவனுடையதே ஆகிவிடுகிறது. ஆனந்த வார்கழலே - . ஒப்பாக ஒப்புவித்த உள்ளத்தார் உள் இருக்கும். இவ்வாறு அடியார் உள்ளத்தில் புகுந்து வாழும் அந்தப் பெருமானே எல்லோருக்கும் . எளியவன் என்று: எண்ண முடியுமா? இந்திராதி தேவர்களும் காண முடியாத பெருமான் அவன். . . . . நமக்குத் தெரியாத இடங்கள் எத்தனையோ உள்ளன. இந்த உலகத்தில் பிறர் கண்டும் நாம் காதை இடங்கள் பல உண்டு. அவை நமக்கு அப்பாலாக உள்ளவை. மற்ற உலகங்களைப் பற்றிச் சொல்லவே. வேண்டியதில்லை. பேரறிவுடையவர்கள், பேராற்றலுடையவர்கள் எல்லா இடங்களுக்கும் சென்று வருகிருர்கள். வானத்தில் பறக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/107&oldid=894701" இலிருந்து மீள்விக்கப்பட்டது