பக்கம்:திரு அம்மானை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 திரு அம்மான அவர்கள் வேகமாக ஆடும்போது தலையை மேலும் கீழும் உயர்த்தியும் தாழ்த்தும் ஆடுவகளுல் அவர்களுடைய கூந்தல் அவிழ்ந்து புரள்கின்றது. கருமை நிறம் பொருந்திய அந்தக் குழல், ஆடும் வேகத்திற்கு ஏற்பப் புரள்கிறது. மை ஆர் குழல் புரள. அவ்வாறு ஆடும்போது அவர்கள் குடியுள்ள மலர் மாலே அவிழ்கிறது. அந்த மலரில் மொய்க்கும் வண்டுகள் பறக்கின்றன; முரலுகின்றன. தேன் என்னும் சாதி வண்டும் பிற வண்டுகளும் குழலிலிருந்து புறப்படுகின்றன; ரீங்காரம் செய்கின்றன. . . . * தேன் பாய, வண்டு ஒலிப்ப. . ९ அவர்கள் அம்மான ஆடும்போது பாடுகிறர்கள்: அந்தப் பாட்டு இறைவன் புகழைச் சொல்லும் பாட்டாக இருக்கிறது; அவனைப் பாடி ஆடுவோம்' என்று சொல்லிப் பாடுகிருர்கள். அவன் இயல்புகளைப் பரவும் பாட்டு அது. அவன் எத்தகையவன்? - அவன் திருமேனி செக்கச் செவேலென் று பவளம் போல இருக்கிறது. “சிவன் எனும் பெயர் தனக்கே உரிய செம்மேனி எம்மான்' அல்லவா? அவனைப் பாடுவோம் என்கிருர்கள். - செய்யான. அந்தத் திருமேனியில் வெண்ணிற்றைப் பூசியிருக். கிருன் மெல்லிய வெண்திரை போர்த்தாற் போல அந்த விெண்ணிறு இலங்குகிறது. அதனூடே செம்மேனித். தேசும் தெரிகிறது. - செய்யான, வெண்ணிறு அணிந்தானே. - - சிவபெருமான் எல்லோருக்கும் மேலானவன்; மால், பிரமன், இந்திரன் முதலிய யாவரும் அவனைக் கும்பிட்டு: 裳

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/120&oldid=894731" இலிருந்து மீள்விக்கப்பட்டது