பக்கம்:திரு அம்மானை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழும்பில் ஈடுபடுத்தியவன் 121 பதற்குத் தொண்டர் கூட்டம் என்று பொருள் கொண்டு அந்தக் கூட்டத்தில் ஒருவனாக ஏற்றுக் கொண்டு என்றும் கொள்ளலாம். வானவன் தேவன்; 'தேவர்கோ அறியாத தேவதேவன்' என்றபடி, பூங்கழல்-தாமரையைப் போன்ற திருவடி; கழல்: ஆகுபெயர்; பூவேலை செய்த கழலை அணிந்த திருவடி என்று அன்மொழித் தொகையாகவும் கொள்ள லாம். கழலே! ஏகாரம், பிரிவிலை; மற்றவற்றைப் பாடுதலை ஒழித்து அதனையே பாடுவோம் என்றபடி, பாடுதும் பாடுவோம். காண்: அசை.) இறைவன் வலிய வந்து ஆட்கொண்ட பெருங் கருணையை நினைந்து வியக்கிறார் மணிவாசகர். திருவம்மானையில் வரும் 14-ஆவது பாட்டு இது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/135&oldid=1418524" இலிருந்து மீள்விக்கப்பட்டது