பக்கம்:திரு அம்மானை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 திரு அம்மானை

அத்தகைய சிவபெருமான் பாண்டியனுடைய ஆட்சியி விருந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கிறான், அந்தப் பதி சோலைகள் சூழ்ந்து தண்மையாக விளங்குகிறது. அந்கச் சோலைகளில் செவ்வண்ணமுடைய மலர்கள் பூத்துக் குலுங்குகின் றன. மாலைகளை அங்கங்கே தொங்கவிட்டது . போல அவை காட்சியளிக்கின்றன. ' - செந்தார்ப் பொழில் புடைசூழ் தென்னன் - பெருந்துறையான், அந்தப் பெருமான் தன் திருத்தோளில் பலவகை !லை . . -களை அணிந்திருக்கிறான், அவற்றில் மந்தார மாலையும் ஒன்று, 'அந்த மாலையைப் பாடி அம்மானை ஆடுவோம்' என்கிறார். மந்தார் மாலையே பாடுதுங்காண் அம்மானாய்! தலைவனுடைய அங்கங்களில் மாலையும் ஒன்று. அதைச் . சிறப்பித்துப் பாடுதல் மரபு, தசாங்கம் என்ற பிரபந்தத்தில் மாலையைப் பாடும் பாடலும் இருக்கும். திருவாசகத்தில் வரும் திருத்தசாங்கத்தில், “தாளி அறுகாம் உவந்த தார். என்று. மாணிக்கவாசகர் பாடுகிறார். - தக்கயாக சங்காரம் செய்த பிறகு அந்த வெற்றிக் களிப்பினாலே பெருமான் மாலையை அணிந்து மகிழ்ந்து விளங்குகிறான். . அதனால் அந்த மாலையைப் பாடும்படி சொல்கிறாள். தீயவர்களின் தீய செயலை அழிப்பதனால் - உலகுக்கு நலம் உண்டாகிறது. அதனால் அந்தச் செயல் போற்றுவதற்குரியது. தீய சக்திகளை - ஒழிப்பதும் இறைவனுடைய கருணைதான். அது மறக்கருணை எனப் படும். நோய் தீர்ந்தான் ஒருவன் அதனைத் தீர்த்த மருத்துவனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/138&oldid=1418528" இலிருந்து மீள்விக்கப்பட்டது