பக்கம்:திரு அம்மானை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

130 ' - திரு அம்மானை . வன் தான் மெய்யான அமுதம். அவனை உண்டவர்கள் , தம்முள்ளே கலக்கப் பெற்றவர்கள், இனிப் பிறந்து வந்து சாவா நிலையைப் பெறுவார்கள். ஆகவே அவனையே அமுதம் என்று சொல்ல வேண்டும். “கண்ணார் அமுதக் கடலே போற்றி", என்று பிறிதோரிடத்தில் திருவாசகத்தில் வருகிறது. . தீங்கரும்பின் கட்டி என்றது கற்கண்டுக் கட்டியை தீங்கரும்பு-இனிய கரும்பு; - கற்கண்டு செய்வதற்குரிய சிறந்த செங்கரும்பைக் கட்டிக் கரும்பு என்று சொல் வார்கள். அத்தகைய இனிய கரும்பிலிருந்து உண்டாக்கிய கற்கண்டைப் போல இறைவன் இருக்கிறானாம். வாயில் - வைத்துச் சுவைக்கச் சுவைக்க இனிக்கும் கற்கண்டைப் போல, இறைவன் 'காண்டொறும் பேசுந்தொறும் எப் பொழுதும்'. இனிப்பவன் இந்தப் பிறவியிலேயே இறைவன் உடலிடம் கொண்டு தன்னைத் தந்தான், இனிப் பிறவாத வழியைத் திறந்து வீட்டான். இந்த உடம்பை விட்டால் 'அந்த வழியே. சென்று இறைவனோடு இரண்டறக் கலக்கும் நிலை உண் டாகும், இந்த உடம்பு இருக்கும் போதே சிவானந்த அநுபவம் பெற்றிருப்பது ஜீவன் முக்தி, உடம்பை விட்ட - பிறகு அடையும் நிலை விதேகமுக்தி. . . இவ்வாறு ஜீவன் முக்தியையும் பிறகு விதேக முக்தி யையும் - அடையும் வழியை. இறைவன் தன் அடியார் களுக்குக் காட்டியருளுகிறான். தேவலோகத்தில் வசழும் தேவர்கள்' மனிதர்களைக் காட்டிலும் மேல் 'நிலையிலிருந்து பல வகையான போகங்களைத் துய்ப்பவர்களாயினும் அவர்கள் இந்த வழியை அறியமாட்டார்கள். . அத்தகைய அரிய வழியை இறைவன் அடியார்களுக்கு வழங்கியருளு கிறான். ' - : -- . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/144&oldid=1418544" இலிருந்து மீள்விக்கப்பட்டது