பக்கம்:திரு அம்மானை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

148 திரு. அம்மானை அளிவந்த அந்தணனை. - அவன் இவ்வாறு திருப்பெருந்துறைக்கு வந்து அருள் புரிந்த செயலைப் பலவிடங்களில் மணிவாசகர் சொல்வார் “ செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித் திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி அந்தணன் ஆலதும் காட்டிவந்து ஆண்டாய்" என்று திருப்பள்ளியெழுச்சியில் பாடுவார்.. - பிரமனை ஆதியந் தணன் என்றும், சிவபெருமானை அநாதியந்தணன் என்றும் கூறுவது மரபு. இறைவன் திருப்பெருந்துறைக்கு வந்து இருந்தான். அவனருளால் ஞான ஒளி மணிவாசகர் உள்ளே புகுந்து நின்று நலம் செய்தது. - - - - - அத்தகையவனை நாம் பாடுவோம்' என்கிறாள் அம்மானை ஆடும் பெண்ணாக நின்ற மணிவாசக நாய்கி, கிளிவந்த மென் மொழியாள் கேழ்கிளரும் பாதியனை, வெளிவந்த மால் அயனும் காண்பரிய வித்தகனைத் தெளிவந்த தேறலைச் சீர் ஆர் பெருந்துறையில் எளிவந்து இருந்து இரங்கி எண்ணரிய இன்னருளால் ஒளிவந்து என் உள்ளத்தின் உள்ளே ஒளிதிகழ அளிவந்த அந்தணனைப் பாடுதுங்காண், அம்மானாய்! - .

  • அம்மானை ஆடும் பெண்ணே , கிளியினது மொழியைப் போன்ற மென்மையையுடைய மொழிகளைப் பேசுபவளாகிய உமாதேவியின் பச்சை நிறம் கிளர்ந்து தோன்றும் இடப் பாதியை உடையவனை, - உண்முக நோக்கம் இன்றி வெளியே காணுவோம் என்று வந்த திருமாலும் அயனும்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/160&oldid=1418558" இலிருந்து மீள்விக்கப்பட்டது