பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

154 மு. பரமசிவம் :

அன்றைய சினிமாவில் புகழ்பெற்ற நடிகர்களான எம்.ஜி. ராமசந்திரன், சிவாஜி கணேசன் போன்ற வர்களின் படங்களுக்கு வசனம் எழுதிய போதிலும் அந்த இருவரிடம் கூட அவர் நெருங்கிப் பழகிய தில்லை. அவருக்கு சினிமா நடிகர்கள் பேரில் ஒரு பற்றற்ற நிலை. எனினும் கல்கி, ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றிய எழுத்தாளர் களின் பேரில் மதிப்புள்ளவர்கள் எம்.ஜி.ஆரும், சிவாஜி கணேசனும். சிறப்பாகச் சொல்லவேண்டுமானால் 'மணிக்கொடி வாசகர் எம்.ஜி.ஆர்.

நடிகர்களின் நட்பைப் பெற்ற எழுத்தாளர்கள் நடிகர்களை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார்கள். சில எழுத்தாளர்கள் நடிகர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் பெற்றுப் பத்திரிகை நடத்தினார்கள்; மற்றும் சிலர், நடிகர்களை வைத்துப் படம் எடுத்தார்கள். வெற்றி பெற்றார்கள். கலையும், இலக்கியமும் கைகோத்து நடந்தன. பத்திரிகைகளில் இரண்டு நடிகர்களையும் இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்து எழுதினார்கள்.

இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டி ருந்த சுயமரியாதைக்காரர் விந்தனால் நடிகர்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. தான் நடத்திய மனிதன் பத்திரிகை பொருளாதார நெருக்கடியில் துவண்டபோதும் எந்த நடிகரிடமும் விந்தன் கை ஏந்தியதில்லை. ஆனால், தன் மகள் திருமணத்துக்காக வள்ளல் நடிகரிடம் வாய் திறந்து