பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 மு. பரமசிவம் *

பின்னர் அந்தக் கதை ‘காதலும் கல்யாணமும்' என்ற பெயருடன் க.நா.சுப்பிரமணியம் முன்னுரையுடன் வெளிவந்தது.

1963இல் 'முன்னணி இதழில் 'ஏமாந்துதான் கொடுப்பீர்களா?' என்ற பெயரில் சிறுகதை எழுதினார். அந்தக் கதையைக் கவிஞர் கண்ணதாசன் நாடகமாக்க முயன்றார். பின்னர் அந்தக் கதை இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டது.

1964இல் ஜூலை 15ஆம் நாள் மு.பரமசிவம் அவர்களால் 'பாலும் பாவையும் நாடகமாக்கப்பட்டு ராஜா அண்ணாமலை மன்றத்தில் அரங்கேறியது.

1967இல் டிசம்பர் 17ஆம் நாள் அகில இந்திய வானொலியில் 'பாலும் பாவையும் நாடகமாக ஒலி பரப்பப்பட்டது. அதே ஆண்டில் விந்தன் தினமணி கதிர் ஆசிரியர் குழுவில் சேர்ந்தார்.

கதிர் பத்திரிகையில் பலசோதனைகளுக்கிடையே பணியாற்றிய விந்தன் 1974ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.

‘வாழ்ந்தாலும் 'லோ சர்க்கிளோடு வாழ்வேன்', 'செத்தாலும் லோ சர்க்கிளோடு சாவேன்!" என்று சொல்லிக்கொண்டிருந்தவர் 1975 ஜூன் 30இல் மாரடைப்பால் மரணமடைந்தார்.

விந்தன் வாழ்ந்த ஆண்டுகள் ஐம்பத்தொன்பது ஆண்டுகளுக்குக் குறைவுதான்.