பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீசகன் வதம் 153 அரண்மனை வாசம் அவர்களுக்குப் பாதுகாப்புத் தந்தது; வசதிகளும் அமைந்தன. மல்லன் ஒருவன் விராட நகருக்கு வந்து மற்போர் செய்ய வீரரை அழைத்தான்; வீமன் பலாயினன் என்னும் புனைவுப் பெயரில் அங்கே சமையல்காரன்' அவன் முன் வந்து அந்த மல்லனை எதிர்த்துப் போர் செய்து அவனைச் சாய்த்து மண்ணில் வீழ்த்தினான். வீமன் புகழ் ஓங்கியது: அவனைக் கண்டு அங்கு உள்ளவர் அஞ்சினர்; அவனுக்குத் தனிமரியாதை. திரெளபதிக்கு அங்கு வண்ணமகள் வடிவு: அவள் பெயர் விரதசாரணி: அங்கே அவள்