பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு -1

இந்துமத சூட்சுமம்

எம். தினகர்

ஏறுமயிலேறி விளையாடுமுக மொன்றே ஈசனுடன்ஞானமொழி பேசுமுக மொன்றே கூறுமடியார்கள் வினைதீர்த்தமுக மொன்றே குன்றுருவவேல்வாங்கி நின்றமுக மொன்றே மாறுபடாதரரை வதைத்தமுக மொன்றே வள்ளியைமனம்புணர வந்தமுக மொன்றே ஆறுமுகமான பொருணியருள வேண்டும் ஆதியருணாசலமமர்ந்த பெருமாளே.

என்று குமாரக்கடவுளைக் பற்றிச் சொல்லும் மேற்கண்ட கவி இப் பிரபந்தத்தின் முதற் பத்தியில் அமைக்கப்பட்டிருக்கிறது.

இக் கவியானது அகஸ்திய மஹா முனிவரால் இயற்றப் பட்டதே தவிர பூரீ அருணகிரிநாதரால் இயற்றப்பட்டதாகக் கொள்வதற்கு எவ்விதக் காரணங்களுமில்லை யென்பது பின்வரும்

உதாரணங்களால் நன்கு விளங்கும்.

"வாக்கிற்கருணகிரி' யென்று வழங்குதற்போல், புகழ் பரவும் அருணகிரியாரின் வாக்கு ஒப்பற்றதே. ஆனால் அருணகிரிநாதரின் வாக்கு வன்மை கொண்ட பாடல்களையும், மேற்கூறிய 'ஏறுமயிலேறி விளையாடுமென்ற கவியையும், ஒப்பிட்டுப் பார்த்தால் கொஞ்சமேனும் பொருந்தத்தக்கதாக இல்லை. மேலும் இதற்கும், அதற்கும். எந்தவிதக் காரணங்களாலும் சம்பந்தமிருப்பதாகக் கருதவும் முடியவில்லை. இவை

125